`காலா’வுக்கும் கார் டயர்களுக்கும் இதுதான் ஒற்றுமை!Sponsoredழி ரப்பர், ரப்பர் பேண்டு, ரப்பர் பைப்பு, ரப்பர் கிளவுஸ், ரப்பர் செருப்பு, ரப்பர் கைக்கடிகாரம் என நாம் ரப்பரை எங்கு பார்த்தாலும் அது பல வண்ணங்களில் கிடைப்பதாக உள்ளது. ஆனால், ரப்பரில் தயாராகும் டயர் மட்டும் ஏன் கறுப்பு நிறத்திலேயே வருகிறது என யோசித்துப்பார்த்தீர்களா? ரப்பரின் உண்மையான நிறம் வெள்ளைதான். ஆனால், கார் டயர் மட்டும் ஏன் கறுப்பாக இருக்கிறது? 

ரப்பர் பொருள்களைத் தயாரிப்பவர்கள் எந்த நிறம் தேவையோ அந்த நிறத்தைச் சேர்த்துக்கொள்வார்கள். டயர்களை கறுப்பு நிறத்தில் மாற்றுவதற்கு தயாரிப்பாளர்கள் `கார்பன் பிளாக்' என்ற பொருளைச் சேர்க்கிறார்கள். 

Sponsored


கார் டயர்கள் கண்டுபிடிக்கப்பட்ட 1895-ம் ஆண்டில் இவை வெள்ளை நிறத்தில்தான் வந்துகொண்டிருந்தன. `வல்கனைசேஷன்' எனும் ஒரு முறையைப் பயன்படுத்தி ரப்பரை கடினமாக்குவார்கள். வல்கனைசேஷன் செய்யப்பட்ட பிறகும் ரப்பர் வெள்ளையாகத்தான் இருக்கும். இந்த வெள்ளையான ரப்பராலான டயர்கள் சீக்கிரமே தேய்ந்துவிடுவதாகவும், தொலைதூரப் பயணங்களில் சூடாகி அதன் வடிவம் மாறுவதாகவும் கருத்துகள் வந்தன. இதை சரிகட்ட, ஜிங்க் ஆக்ஸைடு எனும் பொருளை ரப்பருடன் சேர்த்தார்கள். இது, ரப்பரை பால் வெள்ளை நிறத்தில் பளிச்சென காண்பித்தது.

Sponsored


நாம் இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் கறுப்பு டயர்கள், உலகப்போர் சமயத்தில் உருவானவை. ஜிங்க் ஆக்ஸைடு சுலபமாகக் கிடைக்கும் பொருளாக இருந்தாலும், அதைத் தனியாக உற்பத்தி செய்யவேண்டியிருந்தது. இன்ஸ்டாகிராமில் நம் படத்துக்கு ஃபில்டர் போடுவதுபோல அது ஒரு பெரிய ப்ராசஸ். வேறு எதையாவது பயன்படுத்துவோம் என முடிவெடுத்து, நிலக்கரி மற்றும் பெட்ரோல் சுத்திகரிப்பில் மிச்சமாகும் `கார்பன் பிளாக்' எனும் பொருளை ரப்பரோடு சேர்த்துப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கார்பன் பிளாக்கைப் பயன்படுத்துவதால் தேய்மானம் குறைவதைக் கண்டு முதலில் அதை டயரின் டிரெட்டில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இதனால் டிரெட் கறுப்பாகவும் டயரின் மற்ற பகுதிகள் வெள்ளையாகவும் இருந்தன. இதைத்தான் `ஒயிட்வால் டயர்கள்' என்பார்கள்.

இந்த ஒயிட்வால் டயர்கள் குறைந்த காலத்துக்கு மட்டுமே உற்பத்தியாகின. இவை மதிப்பானவைபோலப் பார்க்கப்பட்டதால் போலிகள் அதிகமானது. டயர்களை முழுவதுமாக கறுப்பு நிறத்தில் செய்துவிட்டு, பக்கவாட்டு பகுதிகளுக்கு மட்டும் வெள்ளை ரப்பர் கோட்டிங் கொடுத்துவிடுவார்கள். உண்மையான ஒயிட்வால் உங்களிடம் இருந்தால் அதன் மதிப்பு இப்போது மில்லியன் டாலர் கணக்குகளில் இருக்கும். தயாரிப்பின்போது ரப்பருடன் மற்ற கலர் பொருள்களைச் சேர்ப்பதால் கலர் கலர் டயர்களை உருவாக்க முடியும். ஆனால், அது எதுவும் கார்பன் பிளாக் தரும் கடினத் தன்மையையும், சூட்டைத் தாங்கும் திறனையும் பெற்றிருப்பதில்லை. இதனாலேயே அனைத்து தயாரிப்பாளர்களும் கறுப்பு நிற டயர்களை மட்டும் பயன்படுத்துகிறார்கள். 

சீனாவில் பிளாஸ்டிக் மற்றும் சிலிக்காவைக் கலந்து கலர் டயர்களை உருவாக்கினார்கள். இது சிறந்த கிரிப்புடன் இருந்தாலும் அதிகமாகத் தேய்வதால் பார்வைக்கு மட்டும் பயன்படுத்தினார்கள். குட்ரிச் எனும் அமெரிக்க நிறுவனம், தனது டயர்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும்  நிறத்தில் கஸ்டமைஸ் செய்துதருகிறது. கலர் டயர்களைத் தயாரிப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. எந்த சைஸ், எந்த நிறத்தில், யார் வாங்குவார்கள் என்பதை கணிக்கவே முடியாது. இதனால், தயாரித்துச் சேமித்து வைக்க முடியாது. முன்பதிவு செய்து வாங்குவதாகத்தான் இருக்கும். உங்கள் பைக்குக்கோ அல்லது காருக்கோ டயர் 30 நாளில் வரும் என்றால், அதுவரை காத்திருப்பீர்களா என்ன?

கறுப்பு நிற டயர்கள் சூரியக் கதிர்களாலும் ஓசோன் வாயுக்களாலும் பாதிக்கப்படாது. சூரிய வெளிச்சத்திலும் மழைச் சாலைகளிலும் பல ஆண்டுகள் வேலைசெய்தும் இவை நிறம் மாறுவதில்லை. தன்மையும் அப்படியே மாறாமல் இருக்கும். அவை நம் காரின் ஹேண்ட்லிங், ஆக்ஸிலரேஷன், பிரேக், கம்ஃபர்ட், பாதுகாப்பு போன்றவற்றுக்கு முக்கியமான விஷயம் என்பதால், அதிக கடினமாகவும் நீடித்து உழைக்கும்விதமாகவும் உள்ள கறுப்பு டயர்களையே எல்லோரும் விரும்புகிறார்கள்.

டயர்களிலும்கூட `கறுப்பு' உழைப்பின் வண்ணம்!Trending Articles

Sponsored