வால்வோ XC40-யின் இரண்டு புதிய வேரியன்டுகள் அறிமுகம்!Sponsoredவால்வோவின் சின்ன எஸ்யூவி  XC40 முன்பதிவுகள் ஆரம்பத்தில் சுமாராக இருந்துவந்தது. ஆனால், கார் விற்பனைக்கு வந்த ஒரு வாரத்திலேயே முதல் 200 கார்கள் விற்பனையாகிவிட்டன. இந்த வெற்றியைத் தொடர்ந்து  R-Design எனும் ஒரே வேரியன்டில் வெளிவந்த வால்வோ XC40 இப்போது புதிதாக மொமன்டம் மற்றும் இன்ஸ்க்ரிப்ஷன் எனும் இரண்டு வேரியன்டுகளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. 

மிட் வேரியன்டான R-Design மற்றும் டாப் வேரியன்டான இன்ஸ்க்ரிப்ஷனில் 18 இன்ச் அலாய் வீல், 750 watt 12 ஸ்பீக்கர் Harman Kardon சவுண்டு சிஸ்டம், 9 இன்ச் செங்குத்தான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, பவர்டு டெயில் கேட், முன் மற்றும் பின் பக்க ஹீட்டட் சீட் போன்ற வசதிகள் வருகின்றன. குறைந்த விலை வேரியன்டான மொமன்டத்தில் 18 இன்ச் அலாய் வீல், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தவிர வேறு எந்த வசதியும் கிடையாது. மற்ற வேரியன்டில் வரும் அடப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலுக்குப் பதில் இந்த வேரியன்டில் சாதாரண க்ரூஸ் கன்ட்ரோல் மட்டுமே. 

Sponsored


Sponsored


R-Design மாடலுடன் வேரியன்டுடன் ஒப்பிடும்போது, விலை உயர்ந்த இன்ஸ்க்ரிப்ஷன் மாடலில் க்ரில் டிசைன் மாற்றப்படுகிறது. 6 spoke டயமண்ட் கட் அலாய் வீல்கள் வருகின்றன, காரின் வெளிப்புறத்தில் கிரோம் வேலைப்பாடுகளும், உள்பக்கம் மர வேலைப்பாடுகளும் வருகின்றன. காரின் பூட் ஸ்பேஸில் சார்ஜிங் பாயின்ட், க்ரிஸ்டல் கியர்நாப், பட்டனைத் தட்டி அட்ஜஸ்ட் செய்யக்கூடிய எலெக்ட்ரிக் ஹெட்ரெஸ்ட் போன்ற கூடுதல் வசதிகள் வருகின்றன. 

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, 8 காற்றுப்பைகள், லேன் அசிஸ்ட், பிளைண்டு ஸ்பாட் வார்னிங், அடப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், பைலட் அசிஸ்ட், எமர்ஜன்சி பிரேக்கிங், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் டிசென்ட் என அனைத்து வேரியன்டிலுமே ஒரே மாதிரியான பாதுகாப்பு வசதிகள் வருகின்றன.  XC40 காரில் 190 bhp பவர் மற்றும் 400 Nm டார்க் தரக்கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் கூட்டணி வருகிறது. 

ரூ. 49 லட்சத்துக்கு விற்பனைக்கு வந்த R-Design வேரியன்ட் இப்போது விலை கூடிவிட்டது.  R-Design வேரியன்டின் விலையில் இப்போது விலை குறைந்த வேரியன்டான மொமன்டமே கிடைக்கும். XC40, மொமன்டம்-ரூ.49.8 லட்சம், R-Design-ரூ.53.5 லட்சம், இன்ஸ்க்ரிப்ஷன்-ரூ. 54.7 லட்சம் எனும் ஆன்-ரோடு விலைகளில் கிடைக்கிறது.Trending Articles

Sponsored