விற்பனைக்கு வந்துவிட்டது G310r மற்றும் G310gs... விலைகள் என்ன தெரியுமா?Sponsoredபிஎம்டபிள்யூ G310r மற்றும் G310gs பைக்குகள் விற்பனைக்கு வந்துவிட்டன. டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ சேர்க்கையின் முதல் பைக்காக வந்த G310r வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிறது. ஆனால், இந்தியாவில் இப்போதுதான் விற்பனைக்கு வந்துள்ளது. நேக்கட் பைக்கான G310r ரூ.2.99 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையிலும், G310gs ரூ.3.49 எனும் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. 

இரண்டு பைக்குகளிலும் அப்பாச்சி RR310 பைக்கில் இருக்கும் அதே  313 cc சிங்கிள் சிலிண்டர் ரிவர்ஸ் இன்ஜின்தான் உள்ளது. இந்த இன்ஜின் 34  bhp பவரையும், 28  Nm டார்க்கையும் தரக்கூடியது. டூயல் சேனல்  ABS ஸ்டான்டர்டாக வருகிறது. USD ஃபோர்க், அட்ஜஸ்டபிள் மோனோஷாக், 11 லிட்டர் பெட்ரோல் டேங்குடன் வரும் இந்தப் பைக்கின் எடை வெறும் 158.5 கிலோதான். 

Sponsored


Sponsored


G310r பைக்கைவிட அதிகம் பேர் காத்திருப்பது G310gs பைக்குக்காகத்தான். 4 லட்ச ரூபாய்க்கு ஓர் அட்வென்சர் பைக். அதுவும் 1200 gs போன்ற பைக்கை தயாரித்த பிஎம்டபிள்யூவின் தயாரிப்பு என்பதாலேயே ஆர்வமாகக் காத்திருந்தார்கள் மக்கள். பறவையின் அலகு போன்ற முன்பக்க மட்கார்டு, ரேடியேட்டர் கார்டு, உயரமான ஹெட்லைட் வைஸர், 40மிமீ கூடுதல் டிராவலுடன்கூடிய முன்பக்க USD ஃபோர்க், கட்டுமஸ்தான பெட்ரோல் டேங்க், 19 இன்ச் முன்பக்க வீல் என G310R பைக்கைவிடத் தோற்றத்தில் வித்தியாசமாக இருக்கிறது  G310GS. 180மிமீ டிராவலுடன் கூடிய 41மிமீ  USD ஃபோர்க்கை அட்ஜஸ்ட் செய்யமுடியாது என்றாலும், பின்பக்க மோனோஷாக்கை அட்ஜஸ்ட் செய்ய முடியும். டியூப்லர் ஸ்டீல் ஃப்ரேம் - ஏபிஎஸ் உடன்கூடிய 300மிமீ/240மிமீ டிஸ்க் பிரேக் செட் அப் - 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் எனப் பல விஷயங்களில் G310R மற்றும் G310GS பைக்குகளுக்கு ஒற்றுமை உள்ளது.

கேடிஎம் டியூக் 390 பைக்குடன் போட்டிபோட வந்திருக்கும் G310r-ன் விலை டியூக்கைவிட ரூ.57,000 அதிகம். G310gs பைக்குக்கு போட்டியாகத் தற்போது இருக்கும் அட்வென்சர் பைக் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் கவாஸாகி வெர்சிஸ் X-300. கேடிஎம் கூடிய விரைவில் 390 அட்வென்சர் பைக்கை விற்பனைக்குக் கொண்டுவரப்போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.Trending Articles

Sponsored