மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிரொலி - சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை! - 18-07-2018Sponsoredவலுவான நிலையில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி இருப்பதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் கூறியதையடுத்து நேற்று அமெரிக்க சந்தையும், அதைத் தொடர்ந்து இன்று ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் முன்னேற்றம் கண்ட போதிலும், இந்திய பங்குச் சந்தை இன்று வலுவிழந்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் ஒரு புதிய உயரமான 36,747.87 என்ற இலக்கை இன்று தொட்டிருந்தாலும், இறுதியில் 146.52 புள்ளிகள் அதாவது 0.40 சதவிகிதம் சரிந்து 36,373.44 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 27.60 புள்ளிகள் அதாவது 0.25 சதவிகிதம் சரிந்து 10,980.45-ல் முடிவுற்றது.

Sponsored


சந்தையின் இன்றைய சரிவுக்கு முக்கிய காரணம், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய NDA அரசு மீது கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்தான். இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Sponsored


அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது சந்தையின் இன்றைய சரிவுக்கு மற்றுமொரு முக்கிய காரணமாகும். நேற்று, டாலருக்கு 68.46 ரூபாய் என்ற நிலையில் முடிந்திருந்த இந்திய நாணயம் இன்று டாலருக்கு 68.63 என்று சரிந்தது. பின்னர் சற்று சுதாரித்து தற்போது 68.56 என்ற நிலையில் வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கிறது.

சர்வதேச உலோகச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, இந்திய உலோகப் பங்குகளும் இன்று மிகவும் விலை சரிந்தன.

ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், பவர் மற்றும் டெலிகாம் துறை பங்குகளும் பெரும்பாலும் சரிந்தன. வங்கித் துறை சார்ந்த பங்குகளும் மந்த கதியில் இருந்தன. சில தகவல் தொழில் நுட்பம், மருத்துவம் மற்றும் எண்ணெய்ப் பங்குகள் சற்றும் முன்னேற்றம் கண்டன. 

இன்று விலை சரிந்த பங்குகள் :

டாடா ஸ்டீல் 5.2%
ஹிண்டால்கோ 3.5%
வேதாந்தா 2.7%
ஆக்ஸிஸ் பேங்க் 2.6%
ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2.3%
லூப்பின் 2.2%
டாடா மோட்டார்ஸ் 2.2%
மஹிந்திரா & மஹிந்திரா 2%
அஷோக் லேலண்ட் 14%
ஜிண்டால் ஸ்டீல் 6.3%
பி.சி.ஜிவெல்லர்ஸ் 6%

விலை ஏற்றம் கண்ட பங்குகள் :

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் 4.1%
ஓ.என்.ஜி.சி 2.6%
பாரத் பெட்ரோலியம் 2.2%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 1.7%
இந்தியன் ஆயில் கார்பொரேஷன் 1.6%
8K மைல்ஸ் சாப்ட்வேர் 6.2%


இன்று மும்பை பங்குச் சந்தையில் 888 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1704 பங்குகள் விலை சரிந்தும்,  135 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.Trending Articles

Sponsored