நீட் பாஸ் செய்த மலர்விழி டாக்டர் ஆகமுடியுமா?  (Sponsored Content)Sponsoredகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கஞ்சிவாக்கம், பலருக்கும் தெரிந்திராத ஒரு சின்ன ஊர். வெள்ளை நிறம் அழுக்கேறிய சுவர்கள், கதவில்லாத ஜன்னல்... வறுமையின் நிறம் வாசலிலேயே தெரிகிறது. வீட்டுக்கு உள்ளே உட்கார ஒரு பிளாஸ்டிக் சேர், சிலபல சாமான்கள், கிட்டத்தட்ட காலியாகத்தான் இருக்கிறது மலர்விழியின் வீடு. மலர்விழியின் அப்பா குமரேசன் கள வேலை செய்யும் கூலி விவசாயி. மாத வருமானம் 5000 ரூபாய்தான்! ஆனால்,  பொருள்செல்வம் இல்லாத இந்த வீட்டில் கல்விச் செல்வத்துக்கு என்னவோ குறைவே இல்லை!  குடும்பத்தில் முதல் பெண்ணான மலர்விழி, இப்போது தங்கள் பரம்பரையிலேயே முதல் டாக்டர்! ஆம், நீட் தேர்வை பஞ்சாக ஊதித்தள்ளிய மலர்விழிக்கு இப்போது டாக்டருக்கு படிக்க அட்மிஷன் கிடைத்துவிட்டது!

18 வயது நிரம்பிய மலர்விழி, பார்க்க சாதுதான். ஆனால், படிப்பு என வந்துவிட்டால் புலிப் பாய்ச்சல். 10-ம் வகுப்பில் 488 மதிப்பெண் எடுத்து மலைக்கவைத்தவளின் திறமையால், கல்வி உதவித் தொகை கிடைக்கிறது. பயாலஜியை விருப்பப் பாடமாக உயர்நிலைப் பள்ளியில் தேர்ந்தெடுத்தார், சின்ன வயதிலேயே படிப்பில்  கொண்ட ஆர்வமும் வெறியும் மேலும் மேலும் அதிகரிக்கவே செய்தது. தன் விடா முயற்சியால் 12-ம் வகுப்பில் 1171 மதிப்பெண்கள் எடுத்து ஊரையே வாய் மேல் கை வைக்கும்படி ஆச்சர்யப்படுத்துகிறாள்!

Sponsored


"டென்த் முடிச்சப்புறம், பயாலஜியில் எனக்கு ஆர்வம் இருந்ததனால அதை எடுத்தேன். எங்க கிளாஸில் டாக்டர் ஆகணும்னு ஒவ்வொரு ஸ்டூடன்ட்ஸும் போட்டி போட்டு படிப்போம்!" - மலர்விழி 

Sponsored


அசோக் என்பவரின் உதவியோடு மலர்விழிக்கு நீட் தேர்வு எழுத ஒரு தொண்டு நிறுவனம்மூலம் கோச்சிங் கிடைத்தது. அங்கும் ஒரு கை பார்ப்பேன் என நீட்டுக்குத் தேவையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு அத்தேர்வில் 243 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துக்காட்டியுள்ளார்...

"கோச்சிங்குடன் 11-ம் 12-ம் வகுப்பு புத்தகங்களை நல்லா படிச்சேன். அதுவே நீட் தேர்வில் பாஸ் ஆக பெருமளவு உதவி செஞ்சது. ஸ்டெதெஸ்கோப் போட்டுக்கிட்டு எல்லா ஏழைகளுக்கும் மருத்துவம் பாக்கணும், அதுதான் என் ஆசை!" - மலர்விழி.

இப்போது...

மலர்விழிக்கு இப்போது கவுனக்சலிங் மூலம் காஞ்சிபுரம் கற்பக விநாயகா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் கல்லூரியில் மெடிக்கல் சீட்டும் கிடைத்துவிட்டது. தன் வீட்டின் ஏழ்மை நிலை எப்போதும் மலர்விழியைத் தன் சாதனைப் பயணத்திலிருந்து கொஞ்சம் கூட தள்ளிப்போகச் செய்ததில்லை. மூத்த பெண் பிள்ளைகளுக்கே உரித்தான குடும்பப் பொறுப்பு அவளின் கவனத்தை மேன்மையுறவே செய்தது. இப்போது கிட்டத்தட்ட டாக்டர் ஆகிவிட்டாள், ஆனால் இங்குதான் சிக்கல். தங்குதடையின்றி முன்னேறி வந்த மாணவியின் பாதையில் தடைக்கல்லாய் இருப்பது கல்விக்கட்டணம். வருடத்துக்கு 5 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.

"காலேஜ் ஃபீஸுக்கு 5 லட்ச ரூபாய் வருஷத்துக்கு ஆவுது. அப்பா விவசாய வேலைதான் பாக்குறதுனால இந்தப் பணத்தை எப்படி கட்டப்போறோம்னு தெரியலை!" - மலர்விழி.

சீட் கிடைத்தும், இன்னும் மலர்விழியின் வீட்டில் கல்லூரிக் கட்டணம் செலுத்தவில்லை. கனவுகள் தாங்கிய நெஞ்சத்தோடு தன் காலேஜ் அட்மிஷன் தேதியை எண்ணிக் காத்திருக்கிறாள் இந்த வருங்கால டாக்டர்.  மலர்விழிக்கு  உதவ, இந்த லிங்கிற்குச் சென்று www.edudharma.com/campaigns/support-malarvizhi, நம்மால் ஆன உதவியைச் செய்யலாம். ​முடிந்தவரை இச்செய்தியை வாட்சாப் மற்றும் பேஸ்புக்கில் பகிர்வது மேலும் நன்மையைச் செய்யும். உதவிபோல பெருஞ்செயல் ஏது?

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை  Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும். Trending Articles

Sponsored