ஹிஜாப் அணிந்தால் நீச்சல் குளத்தில் அனுமதி கிடையாதா..? மேயரை மன்னிப்புக் கேட்க வைத்த தனியொருத்திSponsoredஹிஜாப் அணிந்த முஸ்லிம்  சிறுமிகளைப் பொது நீச்சல்குளத்தில் குளிக்கக் கூடாது என்று சொன்ன சம்பவம், அமெரிக்காவில் பெரிய பிரச்னையாகியிருக்கிறது. 

தாஷின் இஸ்மாயில் என்ற சம்மர் கேம்ப் டைரக்டர் ஒருவர், சில பள்ளிச் சிறுமிகளுடன் அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் உள்ள `ஃபாஸ்டர் பிரவுன்' என்ற பொது நீச்சல்குளத்துக்குச் சென்றிருக்கிறார். அது,  இலவச நீச்சல்குளம். அங்கே நடந்ததை அவரே விவரிக்கிறார்.

Sponsored


PC: www.independent.co.uk

Sponsored


``மாலை மூன்றரை மணி. நான் 15 சிறுமிகளுடன் முதன்முதலாக அந்த நீச்சல்குளத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே பணியாற்றும் ஒருவர், என்னுடன் வந்திருந்த சிறுமிகளின் தலையை மூடியிருந்த காட்டன் துணியை நீக்கிவிட்டு, குளத்துக்குள் இறங்கச் சொன்னார். அது, காட்டன் துணி மட்டுமல்ல; அதன் பெயர் ஹிஜாப். `வெளியிடங்களில் நீச்சல்குளமே என்றாலும், ஹிஜாப் அணிவது கட்டாயம். அது எங்கள் இஸ்லாமிய மதத்தின் நம்பிக்கை'' என்று அந்தப் பணியாளரிடம் எடுத்துச் சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. நீச்சல்குளத்தில் இறங்கக் கூடாது என்று கடினமாகச் சொல்லி எங்களை வெளியேற்றினார்'' என்கிறார் தாஷின் இஸ்மாயில்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நீச்சல்குளப் பணியாளர், ``காட்டன் துணிகளை அணிந்தபடி நீச்சல்குளத்தில் குளிப்பது ஆபத்தான விஷயம். காட்டன் துணி நனைந்து, கனம் அதிகமாகிவிடும். அது நீச்சல் அடிப்பவர்களுக்கு நல்லதல்ல. அவர்கள் மதத்தில் கட்டாயம் அணிய வேண்டும் என்று சொல்லப்படும் காட்டன் துணி, கழன்று குளத்தில் விழுந்துவிட்டால், தண்ணீரை வடிகட்டும் ஃபில்டரை அடைத்துக்கொள்ளும்'' என்கிறார்.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக இஸ்மாயில், ``அவர் சொல்வது உண்மையில்லை. நான் இந்தப் பகுதியிலேயே வளர்ந்தவள். இதற்கு முன்னாலும் இந்த நீச்சல்குளத்துக்கு வந்திருக்கிறோம். அப்போதெல்லாம், ஹிஜாபை நீக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை. முதல் தடவையாக, எங்களுக்கு இப்படி நடந்திருக்கிறது. தவிர, சிறுமிகளை நீச்சல்குளத்துக்குள் இறங்கக் கூடாது என்று விரட்டியபோது, `முஸ்லிம்' என்று எங்கள் மதத்தின் பெயரை குறிப்பிட்டு அவமதிப்பாக ஒரு வார்த்தையைச் சொல்லியிருக்கிறார். அதை என்னுடன் வந்த சிறுமிகளில் ஒருத்தி கேட்டிருக்கிறாள். இதில் இன்னொரு விஷயமும் நடந்தது. என்னுடன் வந்த முஸ்லிம் சிறுமிகளின் ஹிஜாபை மட்டுமல்ல, காட்டன் நீச்சல் உடைகளையும் அனுமதிக்க மாட்டேன் என்றவர், மற்றக் குழந்தைகளின் காட்டன் ஸ்விம் சூட்டை அனுமதித்தார். இதை எங்களுக்கு நடந்த பாரபட்சமாகவே கருதுகிறேன். நீச்சல்குளத்தின் விதி இதுதான் என்றால், இதை எல்லோரிடமும் ஃபாலோ செய்திருப்பதுதானே முறை'' என்கிறார் ஆவேசமாக. 

PC: www.washingtonpost.com

இந்த விஷயம், அமெரிக்க - இஸ்லாமிய அமைப்பின் தலைமைக்கு எட்டியது. அந்த அமைப்பும் தன் பங்குக்கு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. விஷயம் பெரிதாகிவிட்டதால், டெலவர் மாகாணத்தின் மேயரான மைக், பிரச்னையில் தலையிட்டிருக்கிறார். ``பொது நீச்சல்குளத்துக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவரும் வரலாம் என்பதுதான் இந்த மாகாணத்தின் பாலிசி. நீச்சல் அடிக்க அனுமதி மறுக்கப்பட்ட அந்தக் குழந்தைகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மதத்தைப் பற்றி இழிவான வார்த்தைகளை அந்தப் பணியாளர் சொல்லியிருந்தால் அதுவும் தவறு. அதற்கும் என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

இதைக் கேட்டு மனம் குளிர்ந்துபோன இஸ்மாயில், தன் மாணவிகளுடன் பொது நீச்சல்குளத்துக்குச் சென்று, அங்கிருந்து லைவ் செய்திருக்கிறார். அந்த வீடியோவில், ஹிஜாய் அணிந்த சிறுமி ஒருவர் நீச்சலடிக்க குளத்துக்குள் இறங்குகிறார். இதுபற்றி தன் முகநூலில், `ஒரு நீச்சல்குளத்தின் கதவு மூடிக்கொண்டால், இன்னொரு குளத்துக்குச் சென்று கேம்பைக் கொண்டாடுவோம்' என்று ஸ்மைலி போட்டிருக்கிறார்.Trending Articles

Sponsored