நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம்! இந்தியாவில் எப்போது தென்படும்?21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திரகிரகணம், வரும் ஜூலை 27-ம் தேதி தென்பட உள்ளது. இது, 1 மணி 45 நிமிடங்கள் வரை தென்படும் என கூறப்பட்டுள்ளது. 

Sponsored


இந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள், வரும் வெள்ளிக்கிழமை வானில் ஓர் அதிசய நிகழ்வைக் காண உள்ளனர். 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திரகிரகணம்  அது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டில் சந்திரன் வருவதால் இந்த அரிய நிகழ்வு ஏற்பட உள்ளது. சூரிய ஒளி நிலவின்மீது விழும்போது, ரத்தச் சிவப்பு நிறத்தில் மிகச்சரியான உருண்டை வடிவில் நிலவு தெரியும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Sponsored


இந்த சந்திரகிரகணம் தோன்ற உள்ள மையத்தில் இந்தியா உள்ளது. எனவே, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த அரிய நிகழ்வை எளிமையாகப் பார்க்க முடியும். வரும் ஜுலை 27-ம் தேதி இரவு 11:44 மணிக்கு இந்தியாவில் சந்திரகிரகணம் தென்படும் என அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். மேலும், ஜூலை 28-ம் தேதி நள்ளிரவு 12:45 மணிக்கு மேல் முழுமையான சந்திர கிரகணத்தைக் காணமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்தியா அல்லாமல் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் தென்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இது மட்டுமல்லாது, இந்த மாதம் அற்புதமான இரு வேறு நிகழ்வுகளும் தோன்ற உள்ளன. அவை, வரும் ஜூலை 27-ம் தேதி முழு நீளச் சந்திரகிரகணமும், ஜூலை 31-ம் தேதி, நிலவுக்கு மிக அருகில் செவ்வாய்கிரகம் வரும் நிகழ்வும் நடைபெற உள்ளது. 15 வருடங்களுக்குப் பிறகு செவ்வாய்கிரகம் பூமிக்கு மிக அருகில் தென்படப்போகிறது. Trending Articles

Sponsored