`தனி அடையாளம் இருக்கலாம்;தனியாக இயங்கினால் அழிவுதான்!’- செர்ஜியோ மார்க்கியோனிSponsoredகதைகள், படைப்புகள், வதந்தி, செய்தி, கிசுகிசு என ஒருவர் நமக்கு எப்படி வேண்டுமானாலும் அறிமுகமாகலாம். அவர் நமக்கு எப்படி அறிமுகமாகிறாரோ அதன் ஊடாகவே நாம் அவரைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், நாம் அவரைச் சந்தித்தால், அவர் சொல்வதைக் கேட்டால், அவர் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் உடைந்துவிடும். அவரின் சுயம் தெரியும். அவரை நாம் புதிய கோணத்தில் பார்ப்போம். செர்ஜியோ மார்க்கியோனி எனும் ரட்சகனை அவரின் வார்த்தைகளின் மூலமே புரிந்துகொள்வது சிறந்தது.

செர்ஜியோ மார்க்கியோனி எப்போதுமே உண்மையை ஒப்புக்கொள்ளகூடியவர். மனதில் இருந்துதான் பேசுவார். கிரைஸ்லர் 200 காரைப் பற்றிய பேச்சு வந்தபோது. ``கிரைஸ்லர் 200 காரின் தோல்விக்கு காரணம் அதனுடைய ரியர் சீட் என்ட்ரிதான். அவ்வளவு குறைவான என்ட்ரியை வைத்தது எங்கள் தப்புதான். இதை ஹூண்டாய் காரில் இருந்துதான் காப்பி அடித்தோம். மொத்த காரையும் இல்லை. ரியர் சீட் என்ட்ரியை மட்டும்... அந்தக் காரிலும் இது ஃபெயிலியர்தான். இந்த தோல்விக்காக என் டிசைனர்களுக்கு தண்டனை கொடுத்திருக்கிறேன்." என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

Sponsored


மார்க்கியோனியின் கொள்கை

Sponsored


செர்ஜியோ எப்போதும் கூட்டாக சேர்ந்து இருக்கவேண்டும் என்று விரும்புவார். ஆனால், முடிவெடுக்கும் சுதந்திரத்தை பரவலாக எல்லோருக்குமே தருவார். கார் நிறுவனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று  ப்ளூம்பெர்க் நிருபர் ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு, ``இன்னும் 10 வருஷம்தான் இருக்கு. அதற்குள் எல்லா நிறுவனங்களும் தங்களை புதுப்பித்துக்கொள்ளவேண்டும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஒரே நிறுவனமாக வேலை செய்தால் எல்லாருமே பிழைப்போம். தனி அடையாளம் இருக்கலாம். ஆனால், தனியாக இயங்கினால் அழிவுதான்." என்று எல்லோரையுமே தனி நிறுவனமாக இயங்காமல் ஒரு பெரிய நிறுவனத்தின் கீழ் தனி அடையாளமாக இயங்க சொன்னார். அவர் கடைசிவரை கடைபிடித்த கொள்கை இது.

பிரஷர் இருந்தால்தான் வேகமாக முடிவெடுக்க முடியும்

ஃபியட் நிறுவனத்தின் இயக்குநர்கள் அமைதியாக வேலைசெய்ய வேண்டும் என்பதற்காக அவர்களின் அலுவலகம் பசுமையான தோட்டத்தின் நடுவில்தான் இருக்குமாம். செர்ஜியோ பதவிக்கு வந்தவுடன் அந்த அலுவலகத்தை இன்ஜினியர் ரூமுக்கு மாற்றினார். காரணம் கேட்டதற்கு "பிரஷர் இருந்தால்தான் வேகமாக முடிவெடுக்க முடியும்" என்றார். அவருக்குக் கீழே வேலைசெய்பவர்களுக்கு ஒரு வேலை நடந்துகொண்டிருக்கும்போதே அடுத்த 2 வேலைகளைக் கொண்டுவருவாராம். அப்போதுதான், வேகமாக முடிவெடுப்பார்களாம்.

மார்க்கியோனி வேகத்தின் விரும்பி

2014-ம் ஆண்டு ஃபெராரியின் டெஸ்ட் டிராக்கில் தனது கருப்பு என்ஸோவை ஓட்டுவதற்குக் கொண்டுவந்த மார்க்கியோனி, "செம்ம கடுப்பான நாள் கூட, இதுக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லை" என தனது ஃபெராரியின் த்ராட்டிலை அலறவிட்டபடி, 300 கி.மீ வேகத்தை தொட்டுவிட்டு வந்தாராம். இதை ஒரு பத்திரிகையாளர் நினைவு கூர்ந்திருந்தார்.

ஃபெராரி எப்போவுமே ஃபியட் ஆகாது

ஃபெராரியையும், ஃபியட்டையும் தனித்தனியாகவே பார்த்தார் மார்க்கியோனி. ஃபியட்-கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் உருவாக்கி பல கார் நிறுவனங்களை ஃபியட்டின் கீழ் கூட்டணியாக்கியதும். ஃபெராரி  FCA-வின் வேலையைப் பார்க்கக்கூடாது. ஃபெராரி ஃபெராரியாக மட்டுமே இருக்கவேண்டும் என்று ஃபெராரியின் 10 சதவிகித ஷேர்களை நியூயார்க் பங்குச் சந்தையில் வெளியிட்டார். இதனால், ஃபெராரி  FCA-வில் இருந்தாலும், சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் கிடைத்தது. இதேபோலத்தான் மேக்னெட்டி மரெல்லி, ரேம், CNH போன்ற நிறுவனங்களுக்குச் சுதந்திரம் கொடுத்தார்.

நஷ்டத்தை குறைக்க வித்தியாசமான யோசனை

ஃபியட் தயாரித்த எலெக்ட்ரிக் கார் 500 e பற்றி ப்ரூகிங்ஸ் இன்ட்டிட்யூட்டில் பேசும்போது, ``கலிஃபோர்னியா அரசு எல்லா கார் தயாரிப்பாளர்களும் எலெக்ட்ரிக் கார் தயாரிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்காகச் செய்யப்பட்டதுதான் 500e. யாரும் 500 e காரை வாங்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு 500 e விற்கும்போதும் எனக்கு $14,000 நஷ்டமாகிறது" என்றார்.

ரத்தன் டாடாவுடன் நட்பு

ஃபியட்-டாடவுடன் கூட்டணி ஏற்பட்டபோது டாடா நிறுவனத்துக்கு ரத்தன் டாடா  CEO-வாக இருந்தார். அதே நேரத்தில்தான் ஃபியட்டில் மார்க்கியோனி  CEO-வாக இருந்தார். தற்போது ஜீப் காம்பஸ் இந்தியாவில் உருவாவதற்கு மார்க்கியோனிக்கும், ரத்தன் டாடாவுக்கும் இருந்த நட்புதான் காரணம் என்று ஜீப் நிறுவனத்தின் இயக்குநர் மார்க் டி ஆலின் தெரிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு பிசினஸ் லைன் பத்திரிகையின் பேட்டியில், "டாடாவிடம் நான் பார்த்த ஒரு சிறந்த விஷயம், நாட்டை வளர்ச்சிக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று அவர்களுக்கு இருக்கும் கனவுகளும், தீவிர அர்ப்பணிப்பும்தான். உலகில் மற்ற எல்லோருமே தங்கள் கனவை மறந்துவிட்டார்கள்." என்றார்.

சமூக தூண்டுதல்

மார்க்கியோனி சமூக மாற்றத்தை எப்போதுமே முன்நிறுத்துபவர். ஒரு பல்கலைக்கழகத்தில் பேசும்போது, ``எத்தனை பேரோடு சேர்ந்து உழைக்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கைத் திறனையும், சமூக மாற்றத்திற்கான நம் ஈடுபாட்டையும் சொல்லும்" என்று சொன்னார்.

மார்க்கியோனியை பொருத்தவரை தலைவன் என்றால்...

"ஒரு தலைவனுக்கு மதிப்பு, அந்த நிறுவனத்தில் அவன் எத்தனை மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினான் என்பதும், அங்கு எத்தனை தலைவர்களை உருவாக்கினான் என்பதும்தான். அந்தத் தலைவர்கள் புதிய பாதைகளில் பயணிக்கவேண்டும், நிலைமையை மாற்றிக்காட்டச் சவால் விடவேண்டும், போட்டியை உடைத்தெறியவேண்டும், முயற்சியையும், சோதனை முயற்சியையும் கடந்து அடுத்த கட்டத்துக்கு துணிச்சலோடு முன்னேறவேண்டும்!"

செர்ஜியோ மார்க்கியோனியின் வார்த்தைகள் போட்டோ வடிவத்தில் இங்கே...Trending Articles

Sponsored