'ஹெல்மெட்களின் எடையைக் குறைத்தால், அதன் பயன்பாடு அதிகரிக்கும்!'- இது BIS கணக்குSponsoredBureau of Indian Standards (BIS) அமைப்பு, டூ-வீலர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்களுக்குப் புதிய கோட்பாடுகளை விதித்திருக்கிறது. அதன்படி வருகின்ற ஜனவரி 15, 2019 முதலாக, ஹெல்மெட்களின் அதிகபட்ச எடை 1.5 கிலோவில் இருந்து 1.2 கிலோவாக மாற்றப்பட உள்ளது. மேலும் காற்றோட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு, அதில் தேவையான Ventillation Hole-களை வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனுடன் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, ISI சான்றிதழ் பெறாத ஹெல்மெட்களை விற்பனை செய்வது சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாலைஓரத்தில் இருக்கும் பெரும்பான்மையான கடைகளில் விற்பனை செய்யப்படும் தரமற்ற ஹெல்மெட்கள் மற்றும் ISI சான்றிதழ் பெற்ற தொழில்துறை ஹெல்மெட்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதைப் படிப்படியாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹெல்மெட்களை டூ-வீலர்களை இயக்கும்போது மட்டுமே பயன்படுத்த எதுவானவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, Open Face ஹெல்மெட்டைத் தடைசெய்து, Full Face வகை ஹெல்மெட்களை மட்டும் கட்டாயமாக்கி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

Sponsored


 ISIHMA (ISI Helmet Association) என்ன சொல்கிறது?

Sponsored


'இந்தியாவில் டூ-வீலர்களை ஓட்டுபவர்கள் பயன்படுத்தும் Helmet, 75% முதல் 80% ISI சான்றிதழ் பெறாதவையாகவே இருக்கின்றன. தவிர சாலை விபத்துகளில் இறக்கும் நால்வரில் ஒருவர், டூ-வீலரில் பயணிப்பவராகவே இருக்கிறார். இந்தக் கோட்பாடுகளினால், ஹெல்மெட்டைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் சாலை விபத்துகளின் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறையும். மேலும் தரமற்ற மற்றும் போலி ஹெல்மெட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை இதனால் கட்டுப்படுத்தப்படும்' எனக் கூறியுள்ளார்.

ISI ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜீவ் கபூர். புதிய கோட்பாடுகளை அறிவிக்கும் முன்பு, Helmet குறித்து ஒரு ஆய்வை BIS அமைப்பு மேற்கொண்டிருக்கிறது. இதில் ஹெல்மெட்டின் அதிக எடை மற்றும் குறைவான Ventillation ஆகியவை காரணமாகவே, பலர் Helmet அணிவதைத் தவிர்ப்பதாகக் கூறினர். புதிய டெஸ்ட்டிங் பாணி மற்றும் கோட்பாடுகளின்படி தமது ஹெல்மெட்களை மாற்றியமைப்பதற்கு, இந்திய Helmet தயாரிப்பாளர்களுக்கு 6 மாத காலம் கெடு வழங்கப்பட்டிருக்கிறது. 

ஆய்வுகள் உணர்த்துவது என்ன?

WHO (World Health Organisation) நடத்திய ஆய்வுகளின்படி, Helmet அணியாமல் செல்லும் ஒருவர் விபத்தில் சிக்க நேரிட்டால், அவர் தலையில் காயம் அடைவதற்கான சாத்தியம் 40% அளவுக்கு இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், 2017-ம் ஆண்டு டூ-வீலர் விபத்துகளில் இறந்த 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர், Helmet அணியாததால் தலையில் காயம்பட்டு இறந்திருக்கின்றனர்! 2016-ல் இந்த எண்ணிக்கை 10 ஆயிரமாகவே இருந்தது; ஆக டூ-வீலர்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை, இதில் இருந்தே புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியர்கள் ஒரு ஹெல்மெட்டுக்குச் சராசரியாகச் செலவழிக்கும் தொகையான ஆயிரத்துக்கும் குறைவான ரூபாயைச் செலுத்தி Helmet வாங்கி இந்நேரத்தில் பயன்படுத்தி இருந்தால், உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். ISI-ன் விதிமுறைக்கு ஏற்ப ஒரு ஹெல்மெட்டைத் தயாரிப்பதற்குக் குறைந்தது 300 முதல் 400 ரூபாய் தேவைப்படும். எனவே, 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் Helmet, தரமற்றதாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது/அவை போலி ISI சான்றிதழைக் கொண்டிருக்கலாம். 

இந்தியாவில் டூ-வீலர்கள் மற்றும் Helmet தேவை!

சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, 'உலகின் மிகப்பெரிய டூ-வீலர் சந்தை' என்ற பெருமையை, இந்தியா எப்போதோ பெற்றுவிட்டது! இதனாலேயே ஹெல்மெட்களுக்கான வருடாந்திர சந்தை மதிப்பு, 9 கோடி ரூபாய் என்றளவில் இருக்கிறது. எப்படி வழக்கமான கம்யூட்டர் பைக் மற்றும் பர்ஃபாமென்ஸ் பைக் ஆகியவற்றுக்குத் தனித்தனியாக ஒரு சந்தை இருக்கிறதோ, அதேபோலவே வழக்கமான Helmet மற்றும் பிரிமியம் Helmet எனவும் தனியாக சந்தை உண்டாகி இருக்கிறது. இவை மக்களின் தேவை மற்றும் வாங்கும் திறன் ஆகியவற்றைக் காட்டுகின்றன. ஆனால் Helmet அணியாமல் இருக்கவும், அபராதத்தில் இருந்து தப்பிக்கவும், Polystyrene - ப்ளாஸ்டிக் கவர் உதவியுடன் செய்யப்படும் விலை குறைவான தரமற்ற ஹெல்மெட்களை மக்கள் பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது.

ஏனெனில் ISI சான்றிதழ் அளிக்கப்பட்ட ஹெல்மெட்கள் (உலோகம் அல்லாத கட்டுமானம் - Sweat Resistant பெல்ட் - 150 கிலோ எடையைத் தாங்கும் திறன்), 750 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை கிடைக்கின்றன.  உலகளாவிய சான்றிதழ் பெற்ற சர்வதேச ஹெல்மெட்கள், 3,000 ரூபாயில் துவங்கி 1 லட்ச ரூபாய் வரை செல்கின்றன! ஒரு தனிமனிதனின் பாதுகாப்புக்கு, எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவு செய்யலாம்.

சர்வதேச Helmet-களின் எதிர்காலம்?

DOT, ECE, SNELL, Sharp போன்ற சர்வதேச சான்றிதழ்களைப் பெற்ற உலகளாவிய Helmet நிறுவனங்களின் தயாரிப்புகள், பெரும்பாலும் 1.3 கிலோ முதல் 1.5 கிலோ வரையிலான எடையில் உள்ளன. கார்பன் ஃபைபர் மற்றும் Composite மெட்டீரியல்களால் தயாரிக்கப்பட்ட Helmet என்றால், அவற்றின் எடை 1.2 கிலோதான் இருக்கும். ஆனால், அவற்றின் விலை மிகவும் அதிகம்! மேலும், இந்தியாவின் இதற்கான சந்தை மதிப்பும் குறைவாகவே இருக்கிறது. ஆனால், மறுபுறத்தில் எந்த எண்ணிக்கை வளர்ந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

ஒருபுறம் ஹெல்மெட்களின் எடை குறைவதால், அதன் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. மேலும், புதிய விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படுவதால், இவற்றின் விலை தற்போது சந்தையில் இருக்கும் ஹெல்மெட்களைவிட அதிகமாவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ISI சான்றிதழ் பெறாத ஹெல்மெட்களைத் தடை செய்வது நல்ல முடிவாக இருந்தாலும், இந்திய விதிமுறைகளுக்கு உட்பட்ட ஹெல்மெட்களைவிட உயர் ரகமான இறக்குமதி செய்யப்பட்ட சர்வதேச ஹெல்மெட்கள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே?Trending Articles

Sponsored