வீட்டை மட்டுமல்ல... இரை பிடிக்க தூண்டிலையும் எடுத்துச் செல்லும் விஷ நத்தை!Sponsoredஉலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஆச்சர்யம்தான். அதற்கு நத்தையும் விதிவிலக்கல்ல. நத்தை குறித்து நீங்கள் எந்த மாதிரியான விஷயங்களைக் கேட்டிருப்பீர்கள் என்று தெரியாது. அது ஓர் அழகான உயிரினம் என நினைக்கலாம். ஆனால் ஆபத்தானதும் கூட. ஆம், நத்தைகளில் விஷ நத்தைகளும் இந்தப் பூமியில் உண்டு.

உலகிலுள்ள 600 நத்தை வகைகளில் ஆபத்தான அந்த நத்தையின் பெயர் கோன் நத்தை (CONE SNAIL ). பவளப்பாறைகளுக்கு அடியிலும், ஆழ்கடலிலும் வசிக்கிற நத்தை இனம். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறதென்று கையில் எடுத்து வைத்துக் கொள்ள நினைத்தால் அடுத்த நொடி கை வீங்கி விடும்.கூம்பு நத்தை தன்னுடைய வாய் பகுதிக்கு அருகில் நீடித்த ஹார்பூன் போன்ற பற்களை கொண்டிருக்கிறது. அதாவது தூண்டில் போன்ற ஒன்றை ஆயுதமாகக் கொண்டிருக்கிறது. இது நத்தையின் வெற்றுக்  குழாய் போல இருக்கும். அதற்குள் இருந்துதான் அதன் தூண்டில் போன்ற ஹார்பூன் வெளியே வரும். இரையைக் கண்டுபிடித்து அதன் அருகில் செல்கிற நத்தை தன்னுடைய உடலிலுள்ள தூண்டிலை முதலில் எதிரியை நோக்கி செலுத்தும்.

Sponsored


உலகில் உள்ள உயிரினங்களில் ஒரு நொடிக்கும் குறைவான வேகத்தில் எதிரியைத் தாக்கும் உயிரினம் கூம்பு நத்தை மட்டுமே. நத்தையின் உடலிலுள்ள விஷமும் தூண்டிலோடு சேர்த்து எதிரியின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. தூண்டிலில் சிக்கிய எதிரி அவ்வளவு எளிதில் அதிலிருந்து தப்பிவிடமுடியாது. தப்பிப்பதற்குக் கூம்பு நத்தைகள் அவகாசமும் கொடுப்பதில்லை. எதிரியாகவும், உணவாகவும் இருப்பது பெரும்பாலும் மீன்களாகவே இருக்கின்றன. மீன் நத்தையின் தூண்டிலில் சிக்கியதும் நத்தையின் இன்னொரு உடல்பாகமான ரோஸ்ட்ரம் (ROSTRUM) அப்படியே மீனை அதனுடைய வயிற்றுக்குள் இழுத்துக் கொள்கிறது. துடிக்க துடிக்க மீனை தனக்கு இரையாக்கிக் கொள்கிறது. கோன் நத்தைகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன: மீன் உண்ணும் கோன் நத்தை (piscivores), புழு உண்ணும் கோன் நத்தை (vermivores) மற்றும் நத்தைகளை உண்ணும் கோன் நத்தை (molluscivores) இவை மனிதர்கள் தொந்தரவு செய்தால் மட்டுமே மனிதர்களைத் தாக்கும். மனிதர்களைத் தாக்கினால் அதன் விஷம் உடலில் பரவ ஆரம்பித்து உடல்பகுதிகளை செயலிழக்கச் செய்துவிடும். மருத்துவ உதவி எடுக்காமல் இருந்தால் 1 மணி நேரத்தில் உயிரையே காவு வாங்கிவிடும் அளவிற்கு வீரியமானது கோன் நத்தையின் விஷம்.

Sponsored


நத்தையின் விஷம் வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. கூம்பு நத்தையின் விஷம், இரையைத்  தாக்கிய அடுத்த நொடியிலேயே உடல் முழுக்க வேகமாக பரவக் கூடியது. நீரழிவு நோய்க்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். மேலும் கூம்பு நத்தையின் விஷத்தை இன்சுலினாக பயன்படுத்தும் பொழுது மனித உயிரணுக்களில் உள்ள சர்க்கரையை பிரித்தெடுக்கும் எனவும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள  Walter and Eliza Hall Institute of Medical Research சேர்ந்த ஆராய்ச்சியாளர் மிக் லாரென்ஸ் என்பவர் விஷம் பயன்படுத்தப்பட்ட இன்சுலினை மனிதர்களுக்குச் செலுத்தும் பொழுது மிக விரைவாகச் செலுத்த வேண்டும். அதற்குக் கூம்பு நத்தையின் தாக்குதல் முறையைப் பின்பற்றலாம் என அறிவித்திருக்கிறார்.

உலகில் வாழும் உயிரினங்களில் இன்னும் எத்தனையோ நம் கண்ணில் படவேயில்லை. இன்னும் இன்னும் இந்த உலகம் தனக்குள் வைத்திருக்கும் ஆச்சர்யம் எத்தனையோ?


 Trending Articles

Sponsored