`சைலம் டு சேலம்..!’ - சுட்டி விகடனின் `சேலம் 150’ விழாவில் குட்டீஸ் உற்சாகம்Sponsoredசேலம் நகர் உருவாகி 150 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் `சேலம் 150’ சிறப்பு மலர் வெளியீட்டு விழா மற்றும் `சேலம் 150’ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா, சேலம் விஜயராகவாச்சாரியார் ஹாலில் நடைபெற்றது. 

சேலத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. இந்த வரலாற்றில் கடந்த 150 வருடங்களில், பல்வேறு மாற்றங்கள் அடைந்துள்ளன. கடந்த காலங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும், சேலம் மாவட்டத்தின் சிறப்புகளையும் தொகுத்து `சேலம் 150’ சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. சேலம் ரோட்டரி கிளப் ஆஃப் கேலக்சி, இன்டாக் மற்றும் சுட்டி விகடன் இணைந்து 'சேலம் 150 சிறப்பு மலர்' வெளியிட்டன. 

Sponsored


இந்த நிகழ்வை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு `சேலம் 150’ தகவல் தொகுப்பு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்தப் புத்தகத்திலிருந்து வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தகுதித்தேர்வும் நடத்தப்பட்டது. இதில் 50 பள்ளிகளிலிருந்து 7,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். அதில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளைப் பாராட்டி சிறப்பிதழும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன. 

Sponsored


இந்தப் போட்டியில் வென்ற ஆத்தூரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் சந்திரசேகர், ``சேலம் குறித்து பல்வேறு தகவல்களைத் தொகுத்து புத்தகமாக வழங்கியிருக்கிறது சுட்டி விகடன். இந்தப் புத்தகத்தின் வழியே சேலத்தில் யாரெல்லாம் ஆட்சி செய்தார்கள், சேலத்தில் எத்தனை நதிகள் இருக்கின்றன, எங்கெல்லாம் இயற்கை வளங்கள் மிகுந்திருக்கின்றன என்ற விவரங்கள் அனைத்தையும் அறிந்துகொண்டோம். சேலத்தில் மேட்டூர் அணையை எப்போது கட்டினார்கள், எவ்வளவு கொள்ளவு என்ற விவரங்களைத் தெரிந்துகொண்டோம். அணை இருந்தும் சேலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏன் என்பதையும் யோசிக்க வைத்திருக்கிறது சுட்டி விகடன்" என்றார். 

தேர்வில் கலந்துகொண்ட 7-ம் வகுப்பு மாணவன் முகேஷ்தீபன், ``ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பெயருக்கான விளக்கம் தெரியும். ஆனால், ஊரின் பெயரின் விளக்கம் கேட்டால் தெரியாது. சேலம் மாவட்டத்தின் பெயர் சைலம் என்ற வார்த்தையிலிருந்து மாறியது என்பதை `சேலம் 150’ புத்தகத்திலிருந்து தெரிந்துகொண்டேன்" என்றார். 

சங்ககிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் தர்ஷிணி, ``சேலத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்தே தெரிந்துகொண்டேன். சேலம் இரும்பாலையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்ற விவரத்துடன், சேலத்தில் என்னென்ன வழிபாட்டுத்தலங்கள் உள்ளன என்ற விவரங்களையும் தெரிந்துகொண்டேன். நுழைவுத்தேர்வு முறையில் தேர்வெழுதியது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது" என்றார். 

பாராட்டு விழாவின்போது, விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கும், ஒவ்வொரு பள்ளியிலிருந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மூன்று மாணவர்கள் வீதம் மொத்தம் 150 மாணவர்களுக்கும் பரிசு, கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன. விழாவில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், ``இதுபோன்ற நிகழ்வுகள் மூலமே இன்றைய மாணவர்களுக்கு அவர்களுடைய சொந்த ஊரின் வரலாற்றையும், புவியியலையும் எளிதில் கற்றுக்கொடுக்க முடியும். இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துங்கள்" என்று கோரிக்கை வைத்தனர். 

இந்த விழாவைச் சுட்டி விகடனுடன் இணைந்து ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் கேலக்ஸி மற்றும் இன்டாக் அமைப்பு, ஜி.ஆர்.டி நிறுவனம் ஈவன்ட் பார்ட்னர்களாகச் சேர்ந்து செயல்பட்டன. Trending Articles

Sponsored