ஓசி விளம்பரங்களுக்கு வாட்ஸ்அப்பில் தடை!இனி வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் விளம்பரச்செய்திகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையச்செய்திகள் போன்றவற்றிற்கு விலை நிர்ணயம் செய்ய வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் வருமானம் மிகக்குறைவாக இருப்பதால் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

Sponsored


கடந்த ஜனவரி மாதத்தில் வாட்ஸ்அப் பிசினஸ் அப்ளிகேஷன் மூலமாக பிசினஸ் தொடர்பான அக்கவுன்டுகளைத் தொடங்க அனுமதியளித்தது. இதன்மூலம் வியாபார நிறுவனங்கள் தங்களது வியாபாரம் குறித்த தகவல்களையும், விளம்பரங்களையும் வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்க வழிவகை செய்தது. அதில் 3 மில்லியன் பயனாளர்கள் இணைந்தனர். அப்போதே இந்த அப்ளிகேஷனுக்கு எதிர்காலத்தில் விலை நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Sponsored


தற்போது வாட்ஸ்அப் உபயோகப்படுத்துவதில் 1.5 பில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள். வாட்ஸ்அப் பிசினஸ் அப்ளிகேஷனை நோட்டிஃபிகேஷன் அனுப்பவும், ஏற்றுமதி உறுதிப்படுத்துதல், அப்பாயின்ட்மென்ட்டை நினைவுபடுத்துதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கும் பயன்படுத்தும்போது அச்சேவைகள் அனைத்திற்கும் விலை நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது. வாட்ஸ்அப் பயனாளர்களைப் பொறுத்தவரையில், இப்படி விலை நிர்ணயம் செய்வதன்மூலம் தேவையற்ற விளம்பரங்களைத் தவிர்க்கவும், தேவையான வியாபார விளம்பரங்களை மட்டும் பார்க்கவும் வழிவகுக்கக்கூடும் என்பதால் வரவேற்கக்கூடியதே.

Sponsored
Trending Articles

Sponsored