ஏற்றுமதியாளர்களுக்கான ரீஃபண்ட் ரூ.54,378 கோடி!ஏற்றுமதியாளர்களுக்கான ஜி.எஸ்.டி ரீஃபண்ட் ரூ.54,378 கோடி ரூபாய், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தொகையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் (CBIC) ரீஃபண்டாகக் கொடுத்துள்ள ஐ.ஜி.எஸ்.டி. தொகை ரூ.29,829 கோடி அடங்கும். இத்தொகை கிளெய்ம் பண்ணியதில் 93 சதவிகிதமாகும். பார்ம் ஆர்எஃப்டி-01ஏ (RFD-01A) மூலமாக உள்ளீட்டு வரி கிரெடிட்டுக்கு (input tax credit) விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.24,549 கோடி ரீஃபண்ட் தரப்பட்டுள்ளது. இந்த உள்ளீட்டு வரி கிரெடிட்டில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் ரூ.16,074 கோடியையும், மாநில அரசுகள் ரூ.8,475 கோடியையும் ரீஃபண்ட் தந்துள்ளன என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Sponsored


இந்த 2018-ம் ஆண்டு, ஜூலை 16 - 31-க்கு இடைப்பட்ட காலவெளியில் இந்த ரீஃபண்ட் தொகை கொடுக்கப்பட்டுவந்திருக்கிறது. இன்னும் ரீஃபண்ட் கிடைக்காதவர்களுக்கும் கொடுப்பதற்கான வேலைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன என்றும், ஏற்றுமதியாளர்கள் தங்களது ஆர்எஃப்டி-01ஏ விண்ணப்பப் பாரத்தில், வரவு செலவுக் கணக்குகளையும், வருமான வரித்தாக்கல், ஏற்றுமதி ரசீதுகள் உள்ளிட்டவற்றை மிகச்சரியாகக் குறிப்பிட்டிருந்தால், ரீஃபண்ட் வேலைகளை விரைவாக முடிக்க உதவும் என்பதால், அதில் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored