காவிரி ஆற்றைக் காப்பதற்காக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி!Sponsoredதிருவையாறு புஷ்பமண்டப படித்துறையில் பாரத் இயக்கம் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் காவிரி ஆற்றைக் காப்பதற்கான விழிப்பு உணர்வு புகைப்படக் கண்காட்சி நடத்தினர். இதில் காவிரி ஆற்றின் இன்றைய நிலைமையைப் புகைப்படமாக எடுத்து காட்சி படுத்தியிருந்ததோடு, இதைக் காணவந்த அனைவருக்கும் காவிரி ஆற்றின் பெருமைகளைக் கூறி மரக்கன்றுகள் தந்தனர்.

திருவையாறு காவிரி ஆறு புஷ்ப மண்டப படித்துறையில் பாரதி இயக்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் `நடந்தாய் வாழி காவிரி' என்கிற தலைப்பில் காவிரியின் வரலாறு சொல்லும் புகைப்படக் கண்காட்சி காவிரி ஆற்றைக் காப்பதற்கான விழிப்பு உணர்வு நிகழ்ச்சியாக ஆடிப் பெருக்கு நாளான நேற்று நடத்தப்பட்டது. இதில் குடகு தொடங்கி பூம்புகார் வரை சீரழிந்துகொண்டிருக்கும் இன்றைய காவிரி ஆற்றையும் அதன் படித்துறைகளையும் மற்றும் காவிரியின் அழகையும் புகைபடங்களாக எடுத்து கண்காட்சியில் வைத்திருந்தனர். இந்தக் கண்காட்சியைக் கண்ட அனைவருக்கும் ஆறுகளின் அவசியத்தை எடுத்துரைத்ததோடு மரக்கன்றுகளும் கொடுக்கப்பட்டன.

Sponsored


இது குறித்து பாரதி இயக்கத்தினரிடம் பேசினோம். ``காவிரியில் தண்ணீர் வருவதே இப்போது பெரிய விஷயமாகிவிட்டது. காவிரியை நம்பி டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் உள்ளது. இப்படிப்பட்ட காவிரி ஆறு பல இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கிறது. மேலும், பாரம்பர்ய படித்துறைகள் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக காவிரி ஆற்றில் கழிவு நீறை ஓட விடுகின்றனர். இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும். நம் தாயான காவிரியைக் காக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வருடமாகக் குடகு தொடங்கி பூம்புகார் வரை புகைப்படங்கள் எடுத்தோம். அவற்றை மக்கள் அதிகம் கூடும் நாளான ஆடிப்பெருக்கு தினத்தில் கண்காட்சிக்கு வைத்தோம்.

Sponsored


ஆடிப்பெருக்கை கொண்டாட வந்த குழந்தைகள் தொடங்கி புதுமண தம்பதிகள் வரை இந்தக் கண்காட்சியைப் பார்த்தனர். அவர்களிடம் காவிரி ஆற்றின் பெருமையைச் சொல்லி அவற்றை எப்படியெல்லாம் காக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளித்து மரக்கன்றுகளும் கொடுத்தோம். திருவையாறில் மட்டும் மொத்தம் 24 படித்துறைகள் உள்ளன. இது உள்ளூர் மக்களுக்கே தெரியவில்லை. இந்தக் கண்காட்சியைப் பார்த்த அவர்கள் ஆச்சர்யப்பட்டனர். ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன் கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்தி புஷ்பமண்டப படித்துறை அமைந்துள்ள ஆற்றின் பகுதிகளைச் சுத்தம் செய்தோம் காவிரி ஆறு காக்கப்பட வேண்டும் அதைப் புகைப்படங்களின் வாயிலாகச் சொன்னால் மக்களை எளிதாகச் சென்றடையும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. மேலும், இது போன்ற கண்காட்சியைக் காவிரி ஆற்றின் முக்கியமான படித்துறைகளில் நடத்த இருக்கிறோம்'' என்றனர்.
 Trending Articles

Sponsored