'நாங்கள் ஏன் காம்பேக்ட் செடான் தயாரிக்கவில்லை தெரியுமா?' - நிஸான் விளக்கம்!



இந்தியாவில், ஒவ்வொரு மாதமும் புதிய கார்களின் விற்பனையைப் பொறுத்தமட்டில், ஹேட்ச்பேக்குகளும் எஸ்யூவிகளும்தான் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சில காலத்துக்குப் பிறகு, இந்தியாவில் காம்பேக்ட் செடான் செக்மென்ட் மீண்டு எழுந்திருக்கிறது . இதற்கு, இந்த ஆண்டில் வெளிவந்த ஹோண்டா அமேஸை உதாரணமாகச் சொல்லலாம் (ஜூலை 2018 மாத விற்பனை - 10,180 கார்கள்). தனது பண்டிகைக் காலப் பரிசாக, ஆஸ்பயர் ஃபேஸ்லிஃப்ட்டைக் களமிறக்க உள்ளது ஃபோர்டு. உலக அளவில் லேடர் ஃப்ரேம் எஸ்யூவிகளுக்குப் பெயர்பெற்ற நிஸான், ரெனோவுடன் இணைந்து இந்தியாவில் கார்களை உற்பத்திசெய்கிறது. இந்நிலையில், டிசையரின் அதிரடியான விற்பனையைப் பார்த்து, தானும் ஒரு 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட காம்பேக்ட் செடானைத் தயாரிக்கும் முடிவில் இருந்ததாகவும், தற்போது அதற்குப் பதிலாக கிக்ஸ் காரை ஜனவரி 2019-ல் களமிறக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Sponsored


இதைப் பற்றி நிஸான் நிறுவனத்தின் சர்வதேச டிசைன் பிரிவு தலைவரான அல்ஃபோன்ஸோ அல்பைஸாவிடம் கேட்டபோது, 'இந்திய கார் சந்தையைத் தொடர்ந்து கண்காணித்துவருவதால், 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட காம்பேக்ட் செடானை வடிவமைப்பதில் கவனம் செலுத்தி வந்தோம். ஒரு சிறிய செடானை ஸ்டைலாக டிசைன் செய்து, அதில் 5 பேர் சொகுசாக உட்கார்ந்து பயணிக்கும்படிச் செய்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். ஆனால், அந்த செக்மென்ட்டில் போட்டி அதிகமாக இருப்பதுடன், விற்பனை எண்ணிக்கையும் சீரற்ற முறையில் இருக்கிறது. எனவே, அதற்குப் பதிலாக, நாங்கள் தொடர்ச்சியாக டிரெண்டிங்கில் இருக்கும் எஸ்யூவி செக்மென்ட்டில் டெரானோவைத் தொடர்ந்து கிக்ஸ் காரை அறிமுகப்படுத்த உள்ளோம். இது, பார்க்க காம்பேக்ட்டாகத் தெரிந்தாலும் பெரிய வீல்கள், கட்டுமஸ்தான தோற்றம், அதிக உயரம் என அது பார்வைக்கு அசத்தலாக இருக்கும். இந்தியாவில் இதன் நீட்சியாக டெர்ரா எஸ்யூவி இருக்கும் என்றாலும், இப்போதைக்கு அதன் விவரங்களைச் சொல்ல இயலாது' என்றார். (படம் - theophiluschin.com) 

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored