புதிய வரலாறு படைக்கும் நாசா -சூரியனை ஆய்வு செய்ய புறப்பட்டது முதல் விண்கலம்!Sponsoredஉலகில் முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘பார்கர்’ என்ற விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா. 

உலக வரலாற்றில் முதல்முறையாக சூரியனை குறித்து ஆய்வு செய்ய ஒரு பிரத்யேக விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா. நீண்ட வருடங்களாக சூரியனை பற்றி ஆய்வு செய்ய பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் முயன்று வருகின்றன. ஆனால் அவர்களின் எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. சூரியன் குறித்த பல சந்தேகங்களுக்கு விரைவில் விடையளிக்க உள்ளது நாசா. 

Sponsored


நாசா, சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் தயாரிக்கும் பணியைக் கடந்த சில வருடங்களாகச் செய்து வருகிறது. சுமார் 1.5 பில்லியன் டாலர் செலவில் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய காரின் அளவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், சூரியனின் வளிமண்டலம் குறித்து விரைவாக ஆராய்ந்து தகவல்களை வெளியிடும் எனக் கூறப்படுகிறது. இதுவரை சூரியன் அருகேகூட நெருங்கமுடியாது என்ற பிம்பத்தை இந்த விண்கலம் தகர்த்து பல அறிவியல் உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

Sponsored


60 ஆண்டுகளுக்கு முன்னரே சூரியக் காற்று குறித்துக் கணித்த வானறிவியலில் முன்னோடியான யூஜின் பார்கரை கவுரப்படுத்தும் விதமாக இந்த விண்கலத்துக்கு ‘பார்கர்’ என பெயரிடப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும் அறிவியலாளரின் பெயர் ஒரு விண்கலத்துக்குச் சூட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். சூரியனால் புவிக்கு ஏற்படும் பாதிப்புகளை இந்த விண்கலம் மூலம் முன்கூடியே அறிந்துகொள்ளலாம் எனவும் பூமியில் மீது விழும் வெப்பத்தை விட 500 மடங்கு வெப்பத்தை இந்த விண்கலம் தாங்கக்கூடியது எனக் கூறப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored