850 கோடிக்கு முடிந்த டீல் - சத்யம் சினிமாஸ் பங்குகளை வாங்கிய பிவிஆர்?Sponsoredதென்னிந்தியாவை தலைமையாகக் கொண்டிருக்கும் சத்யம் திரையரங்குகளின் உரிமையை பிவிஆர் சினிமாஸ் வாங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. 

சத்யம் திரையரங்குகளின் 71.7% பங்குகளை 633 கோடி ரூபாய்க்கும், பிவிஆரின் சில பங்குகளைக் கொடுத்தும் மொத்தம் 850 கோடி ரூபாய்க்கு இந்த டீல் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என பிசினஸ் ஸ்டாண்டர்டு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. 10 நகரங்களில் (17 இடங்கள்) 76 திரையங்குகளை பெற்றிருக்கும் சத்யம் நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளில் 100 திரையங்குகளை நோக்கி தன் வர்த்தகத்தை விரிவுபடுத்த இருக்கிறது. 

Sponsored


சென்னையில் மட்டும் எஸ்கேப், சத்யம் சினிமா, S2 என பல்வேறு பெயர்களில் சத்யம் இயங்கிவருகிறது.  சில ஆண்டுகளுக்கு முன், பீனிக்ஸ் மாலில் இருக்கும் சத்யம் நிறுவனத்தின் லூக்ஸ் திரையரங்குகளை ஜாஸ் சினிமாஸ் வாங்கியது குறிப்படத்தக்கது. சென்னையில் ஏற்கெனவே பிவிஆர் ஸ்கைவாக் , கிராண்ட் மால் (வேளச்சேரி) , கிராண்டு கலாடா (பல்லாவரம் ) ஆகிய இடங்களில் செயல்பட்டுவருகிறது.

Sponsored


சத்யம் திரையரங்குகளை வாங்கியதன் மூலம், இந்தியாவில் பிவிஆர் திரையரங்குகளின் எண்ணிக்கை 700ஐக் கடக்கிறது . 2020க்குள் 1000 திரையரங்குகளைக் கடப்பதே எங்கள் நோக்கமென  , பிவிஆர் குழுமத்தின் சேர்மேன் அஜய் பிஜ்லி கருத்து தெரிவித்திருக்கிறார். 

இனி சத்யம் திரையரங்கிலும், பிவிஆர் போல், லேட்டாகத்தான் படம் போடுவார்களா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்ஸ் நக்கல் செய்துவருகின்றனர்.Trending Articles

Sponsored