ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் நடவடிக்கையைக் கண்காணிக்கிறோமா? - கூகுள் விளக்கம்



Sponsored



ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், ஸ்மார்ட்போன்களினால் ஏற்படும் விளைவுகளும் அதிகமாகியுள்ளது. 

உலகில், 200 கோடி பேர் ஆண்ட்ராய்டு போன்களில் கூகுளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஐ-போன்கள் வாயிலாக 10 கோடி பேர் கூகுள் மேப்பை பயன்படுத்தி வருகின்றனர். இப்போது, பிரச்னை என்னவென்றால், ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நபர்களின் அன்றாட தனிப்பட்ட நடவடிக்கைகளைக் கூகுள் கண்காணித்து வருவதுதான். ஸ்மார்ட்போன்களில் உள்ள லொகேஷன் ஆப்ஷன் மூலம் தங்களின் நடவடிக்கைகளைக் கூகுள் கண்காணித்து வருவதாகப் பயனாளிகள் கூகுள் மீது பரவலாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள். 

Sponsored


இந்தச் சூழ்நிலையில், லொகேஷன் ஆப்ஷனை ஆப் செய்தாலும், பயனாளிகளின் அன்றாட நடவடிக்கைகளைக் கூகுள் கண்காணித்து வருவதாக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் ஆராய்ச்சி மாணவர் Gunes Acar, `நியூயார்க்கிலிருந்து நியூ ஜெர்சிக்குப் பயணிக்கும்போது தனது ஆன்ட்ராய்டு போனில் லொகேஷனை ஆப் செய்து வைத்திருந்தேன். லொகேஷன் ஆப்ஷனை ஆப் செய்திருந்த போதும் தாம் கண்காணிக்கப்பட்டதாக  கூறியுள்ளார். 

Sponsored


ஆனால், இவரது குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கூகுள், `லொகேஷன் ஆப்ஷனை turn on அல்லது turn off செய்வதைத் தெளிவாக வடிவமைத்துள்ளோம். லொகேஷன் ஆப்ஷன் மூலம் பதிவாகும் விவரங்களைப் பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும் நீக்கம் (delete ) செய்யும் வசதியும் உள்ளது' என விளக்கம் அளித்துள்ளது. எது எப்படியோ, கவனமாகவும் முன் எச்சரிக்கையாகவும் ஸ்மார்ட்போன்களை இன்றைய இளைய தலைமுறையினர் பயன்படுத்துவது அவசியம்.



Trending Articles

Sponsored