எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி பிறந்ததினம் இன்றுSponsoredதன் ஆழமான எழுத்துக்கள் வழியாகத் தமிழ் இலக்கிய உலகின்  முன்னோடிகளில் ஒருவராகத் திகழும் ந.பிச்சமூர்த்தியின் பிறந்த தினம் இன்று.தன் வாழ்நாளில் மொத்தம் ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று கவிதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். மேலும், ‘கலைமகள்’, ‘மணிக்கொடி’ உள்ளிட்ட சிற்றிதழ்களில் இவர் எழுதியுள்ளார்.தத்துவார்த்த சிந்தனைகளின் புனைவு வடிவங்களாகவே அவர் தன் எழுத்துக்களைக் கட்டமைத்தார்.  

 துறவிகள், பைத்தியங்கள், குழந்தைகள் என எளியவர்களிடம்  நேரம் செலுத்துவதில் தீராத பிரியம் கொண்டவராக இருந்தார்.  இவர்களுடன் செலவு செய்த நேரம் ந.பிச்சமூர்த்தியின் படைப்புக்கு ஊற்றாக அமைந்தது.மேற்குலகில் தோன்றும் புதிய இலக்கிய வடிவங்களும் சித்தாந்தங்களும் உடனடியாகத் தமிழில் அறியப்பட வேண்டும் என பிச்சமூர்த்தி விரும்பினார். 

Sponsored


 தமிழில் வட்டார மொழி சார்ந்த இலக்கியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டன. தங்கள் பகுதியின் வாழ்க்கை, கதைகளில் பிரதிபலிக்கப்படுவதைப் பார்க்கும் வாசகர்களுக்கு ஒரு தனி உவகை கிடைக்கிறது. ஆனால் வட்டார வழக்கின் மீது விருப்பம் செலுத்தாத காலம் ஒன்றும் தமிழில் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் இயங்கி வந்த ந.பிச்சமூர்த்தி, வட்டார இலக்கியங்களை வரவேற்கும் ஒருவராகவே இருந்தார். குறிப்பாக, உரையாடல்களில் பிரதேச வாசனை வீசாவிட்டால் அதில் இலக்கிய ரசனையும் உண்மை தன்மையும் இருக்காது என்றே அவர் கருதினார். 

Sponsored


கவிதைகளில் அவர் நிகழ்த்திய ஆளுமை மிக முக்கியமானது.  ந.பிச்சமூர்த்தி. கருத்தாழமும், உணர்ச்சியும், இயற்கை தரிசனங்களும் உடையக் கவிதைகளை அவர் எழுதினார். அவரைப் பலரும் தாகூருடன் ஒப்பிட்டனர். அதற்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பதில் இதோ.


"தாகூருக்கும் எனக்கும் எந்தவிதத்தில் சம்பந்தம் இருக்கிறது எனத் தெரியவில்லை. தாடியைத் தவிர. எல்லோரும் படித்த அளவுக்கோ, படிக்காத அளவுக்கோதான் நானும் தாகூரைப் படித்திருக்கிறேன் ஆங்கிலத்தில். ஆனால், காளிதாசனுக்குப் பிறகு நம் நாட்டில் தோன்றிய மகாகவி, தாகூர் ஒருவரே எனச் சொல்வேன்.” என்றார். ந.பிச்சமூர்த்தியை நினைவு கூர்வோம். 
 Trending Articles

Sponsored