பி.எம்.டபிள்யூ காரை ஓட்டிப்பார்த்த பெண்! விபத்தால் கலங்கிப்போன ஊழியர்கள் #ViralVideo



Sponsored



விலை உயர்ந்த சொகுசு கார்களில் பி.எம்.டபிள்யூ காருக்கென்று தனி மவுசு உண்டு. இந்தக் காரை ஒரு முறையாவது ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை கார் பிரியர்களுக்குத் தோன்றும். அப்படித்தான், சீனாவிலும் ஒரு பெண்மணிக்குத் தோன்றியுள்ளது. 

 கார் ஷோரூம்களில், வாடிக்கையாளர்கள்  வாங்க விரும்பும் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்துபார்க்க அனுமதி உண்டு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கார் திருடர்கள் விலை உயர்ந்த கார்களைத் திருடிச்சென்ற கதையும் உண்டு. இப்போது, இது அல்ல கதை. தென் சீனாவில் உள்ள ஒரு கார் ஷோரூமுக்குக் கடந்த 11-ம் தேதி பெண் ஒருவர் சென்றிருக்கிறார். அங்கு, பி.எம்.டபிள்யூ காரை டெஸ்ட் டிரைவுக்கு எடுத்துள்ளார். அந்த காரை ஓட்டிப்பார்த்த அவர், திரும்பவும் காரை ஷோரூமில் விடவந்திருக்கிறார். இங்குதான், கதையே... அந்த பெண் மனதில் என்ன நினைத்தாரோ, காரை வேகமாக ஓட்டிச்சென்று, ஷோரூமின் கண்ணாடி நுழைவுக் கதவைத் தகர்த்து, வரவேற்பு மேசையின் மேல் மோதியுள்ளார். திரைப்படத்தில் வரும் காட்சிபோல நிகழ்ந்த இந்தச் சம்பவம் அனைத்தும் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ, ஃபேஸ் புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது. 

Sponsored


இந்த விபத்தில், இரண்டு பேர் சிறிய காயத்துடன் தப்பியுள்ளனர். மேலும், நடந்த விபத்துக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார் அந்தப் பெண். அவர் ஓட்டிச் சென்ற பி.எம்.டபிள்யூ காரின் மதிப்பு 470,000 யுவான். அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் தோராயமாக ரூ.47 லட்சம். 

Sponsored




Trending Articles

Sponsored