4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு?



Sponsored



4 ஆண்டுகள் கழித்து சியாஸ் செடானை அப்டேட் செய்து அதன் ஃபேஸ்லிஃப்ட மாடலை வெளியிட்டுள்ளது மாருதி சுஸூகி. சியஸின் ஸ்டைலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்டைல் மட்டுமில்லை இன்ஜினும் மாறிவிட்டது.

காரின் முன்பக்கம் புது க்ரில் டிசைன் வருகிறது. பெரிய ஏர் வென்டுகளுடன் பம்பரும் புதிய தோற்றத்தில் உள்ளது. புரொஜக்டர் லைட், டே டைம் ரன்னிங் லைட் போன்றவை ஸ்வெப்ட் பிளாக் ஹெட்லைட் கிளஸ்டரில் பொருந்தியுள்ளன. கூடுதலாக சியஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் புதிய 16 இன்ச் அலாய் வீல் (விலை உயர்ந்த வேரியன்டில் மட்டும்) மற்றும் புது டெயில் லைட்டுகள் வருகின்றன. காரின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை ஆனால், இந்த ஸ்டைல் அப்டேட்டுகள் காரின் தோற்றத்தைப் புதிதாகக் காட்டுகிறது.

Sponsored


Sponsored


ஃபேஸ்லிஃப்ட் காரின் உள்பக்கத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. அதே பீஜ் இன்டீரியர்தான். ஆனால், டேஷ்போர்டில் இருக்கும் செயற்கை மரவேலைப்பாடுகள் மற்றும் ஸ்டியரிங் வீல் புதியது. வசதிகளைப் பொருத்தவரை புது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் கூடுதலாக வந்துள்ளன. 

காரின் பெரிய அப்டேட் அதன் இன்ஜினில்தான் நடைபெற்றுள்ளது. பழைய 98 bhp பவர் தரும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுக்குப் பதிலாக புதிய 1.5 லிட்டர் கே சீரிஸ் மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் வருகிறது. இது அதிகபட்சம் 103 bhp பவர் மற்றும் 138 Nm டார்க் வெளிப்படுத்தக்கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. டீசல் இன்ஜினை பொருத்தவரை அதே 1.3 லிட்டர் ஃபியட் இன்ஜின்தான். 90 bhp பவர் மற்றும் 200 Nm டார்க்கில் மாற்றம் இல்லை. பாதுகாப்பு அம்சங்களாக 2 ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் அனைத்து வேரியன்டிலுமே வருகிறது. ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்றவை புதிய வசதிகள். சிக்மா, டெல்டா, ஜீடா, ஆல்ஃபா என நான்கு வேரியன்டுகளிலும் 7 நிறங்களிலும் வருகிறது சியாஸ் ஃபேஸ்லிஃப்ட். 

பழைய சியாஸ் உடன் ஒப்பிடும்போது ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை 36,000 ரூபாய் அதிகம். ஆனாலும், போட்டியாளர்களான ஹோண்டா சிட்டி மற்றும் டொயோட்டா யாரிஸை ஒப்பிடும்போது இதன் விலை குறைவு. ஹூண்டாய் வெர்னாவைவிட விலை அதிகம்.



Trending Articles

Sponsored