ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மிட்சுபிஷி கார்!



Sponsored



மிட்சுபிஷி தனது அவுட்லேண்டர் எஸ்யூவியை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. 2015-ம் ஆண்டு வெளிவந்த அவுட்லேண்டர் ஃபேஸ்லிஃப்ட் பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் இந்தியாவில் இதன் விற்பனையை இப்போதுதான் தொடங்கியுள்ளது மிட்சுபிஷி. 

7 சீட் காரான இது ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே கிடைக்கும். ஆட்டோமேடிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், கீலெஸ் டிரைவ், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், பேடில் ஷிஃப்ட்ர், லெதர் சீட்டுகள், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், 6.1 இன்ச் டச் ஸ்கிரீன் இஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 710 வாட் ராக்ஃபோர்டு ஃபோஸ்கேட் சவுண்டு சிஸ்டம் என வசதிகளில் எந்தக் குறைவும் வைக்கவில்லை மிட்சுபிஷி அவுட்லேண்டர். பாதுகாப்பைப் பொருத்தவரை 7 காற்றுப்பைகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆக்டிவ் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ABS, EBD போன்றவை வருகின்றன. 

Sponsored


Sponsored


அவுட்லேண்டரில் 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வருகிறது. இது 167 bhp பவர் மற்றும் 222 Nm டார்க்கை உருவாக்கக்கூடியது. இதனோடு 6 ஸ்பீடு CVT கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் கூட்டாகக் கிடைக்கிறது. விரைவில் அவுட்லேண்டரின் ஹைப்ரிட் மாடலையும் கொண்டுவரவுள்ளதாகக் கூறியுள்ளார்கள். தற்போது 31.95 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் ஸ்கோடா கோடியக், ஃபோக்ஸ்வாகன் டிகுவான், ஹூண்டாய் டூஸான் மற்றும் ஹோண்டா சிஆர்வி உடன் போட்டிபோடுகிறது அவுட்லேண்டர்.



Trending Articles

Sponsored