வானம்-பூமி, சூரியன்-நிலவு, இன்டீரியர்-எக்ஸ்டீரியர் பெயின்ட்! Sponsored Content.



தெருக்களில் நடக்கும்போது திடீரென ஒரு நிமிடம் நம்மை நின்று பார்க்கவைத்துவிடும் சில கட்டிடங்கள். பெயின்டிங்கிற்காகவே சில நொடிகளை செலவு செய்து அவற்றை வேடிக்கை பார்க்கலாம். கட்டிடங்களை சிறப்பான கலர் காம்பினேஷன்களில் பெயின்ட் செய்யும்போது அந்த பகுதியை மெருகேற்றிக் காட்டும் முக்கிய இடங்களில் ஒன்றாக அவை ஆகிவிடுகின்றன. கட்டிடங்களுக்கு இந்த சிறப்புத் தோற்றம் நீடித்து நிலைப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குவன எக்ஸ்டீரியர் பெயின்ட் எனப்படும் வெளிப்புற பூச்சுகள். வீட்டுக்கோ பிற கட்டிடங்களுக்கோ உள்புரங்களில் பூசப்படும் பூச்சை இன்டீரியர் பெயின்ட் என அழைக்கிறோம்.

Sponsored


ஒரே பெயின்டை வெளிப்புறம் உள்புறம் இரண்டுக்குமே பயன்படுத்தலாமா?

Sponsored


இன்டீரியர் பெயின்டஸ் தேய்த்து எடுக்க சுலபமானதாகவும், அழுக்கை எதிர்த்து நிலைக்கவும், கழுவவும் ஏற்றதாக இருக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. எக்ஸ்டீரியர் பெயின்ட் வெளிறிப் போகாமல் நீடித்த நாள் நிலைக்கவும் பூஞ்சை மற்றும் பாசி பிடிக்காமல் இருக்கும் வகையிலும் தயாரிக்கப்படுகிறது. இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் பெயின்ட்களுக்கான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள அவற்றின் வேதியியலை புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், இந்த இருவகை பெயின்ட்களுக்குமான வித்தியாசத்தை தீர்மானிப்பவை அவற்றில் இருக்கும் வேதிப்பொருள்கள்தான்.

Sponsored


குழம்பில், மசாலா கலவை போல, நிறமிகள் (Pigments), கரைப்பான்கள் (Solvents), கூட்டுப் பொருள்கள் (additives) மற்றும் ரெசின்கள் - இவை பெயின்ட்களில் காணப்படுகின்றன. லேட்டக்ஸ் வகை பெயின்ட்களில் நீர்தான் கரைப்பானாக செயல்படுகிறது, ஆயில் பெயின்ட்களில் மினரல் ஸ்பிரிட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெயின்ட் காயும்போது இந்தக் கரைப்பான்கள் ஆவியாகிவிடுகின்றன, மீதி இருப்பது நிறமி, கூட்டுப்பொருள் மற்றும் ரெசின்கள்தான். நிறமியை சுவற்றோடு பிடித்து வைத்திருப்பது ரெசின். எபாக்சி, அக்ரிலிக் மற்றும் சிலிகோன் - இவற்றால் இந்த ரெசின்கள் தயாரிக்கப்படுகின்றன. கூட்டுப் பொருள்கள் - பூஞ்சையை எதிர்க்கும் செயல்பாடு, சுலபமாக துடைக்கக்கூடிய அம்சம்,போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன. வெளிப்புறங்களுக்கு வாட்டர் பேஸ்டு பெயின்ட் அல்லது ஆயில் பேஸ்டு பெயின்ட்டைப் பயன்படுத்தலாம் ஆனால் உள்புறங்களுக்கு ஆயில் பேஸ்டு பெயின்டை நெடியின் காரணமாக பயன்படுத்துவதில்லை.

இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் பெயின்ட்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவது ரெசின்தான். வெளிப்புற பெயின்ட்கள் தட்பவெட்பத்தைத் தாங்கும் வகையிலும், ஈரப்பதத்தை எதிர்த்து நீடிக்கும் வகையிலும் இருப்பது முக்கியம். மேலும், இவை உரிந்துபோகாமலும் சூரிய ஒளியால் மங்கிப்போகாமலும்  இருப்பது அவசியம். இதனால்,  எக்ஸ்டீரியர் பெயின்ட்களில் பயன்படுத்தப்படும் ரெசின்கள் மிருதுவாக இருக்கவேண்டும். ஆனால், இன்டீரியர் பெயின்ட்களில் வெப்பநிலை பெரிய பொருட்டில்லை என்பதால் கடினமான ரெசின்கள் பயன்படுத்தப்படுகிறது...

வெளிப்புற பெயின்ட்களில் இருந்து மிகச்சிறிய அளவில் எப்போதுமே ஆவியாகிக்கொண்டிருக்கும் கரிமப் பொருள்கள் காணப்படுவதால் உள்புறதுக்கு இதை நாம் பயன்படுத்தக் கூடாது. இன்டீரியர் பெயின்ட்கள் இந்தளவுக்கு நெடியை விடுவதில்லை, இருப்பினும் பெயின்ட் செய்யும்போது போதிய அளவுக்கு காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

இரண்டு பரப்புகளுக்கும் பயன்படும் ஒரு பெயின்ட்!

ஜப்பானியர்களை தொழில்நுட்பத்தில் ஒருபோதும் அடித்துக்கொள்ளமுடியாது! உயர்தர ஜப்பானிய தொழிநுட்பத்தில் தயாரிக்கப்படும் தரமான பெயின்ட்களை பல ஆண்டுகளாக வழங்கி ஆசியாவின் நம்பர் ஒன் பெயின்ட் நிறுவனமாக விளங்குகிறது "நிப்பான் பெயின்ட்". இப்போது, வீட்டின் உள்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டுக்குமே உபயோகப்படும் அசத்தலான பெயின்டான "Atom 2 in 1 மல்ட்டிபர்ப்பஸ் எமுல்ஷன்" பூச்சை அறிமுகப்படுத்தியுள்ளது.

விரைவில் ஆவியாகும் கரிமப் பொருள்கள் இதில் குறைவாகவுள்ளதால் நெடியும் மிகமிகக் குறைவாகவே உள்ளது. சுலபமாக துடைக்கக் கூடிய அம்சம் கொண்ட பெயின்ட் என்பதால் உள்சுவற்றில் கறை விழாமல் பார்த்துக்கொள்ளலாம்! சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள Atom 2 in 1  மல்ட்டிபர்ப்பஸ் பெயின்ட் பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம்!



Trending Articles

Sponsored