டாப் 10 டூ-வீலர் விற்பனையில் ராயல் என்ஃபீல்டுக்குப் பதில் CT100...



Sponsored



ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனையான டூ-வீலர்களின் பட்டியல் வந்துவிட்டது. கடந்த இரண்டு மாதங்களாக விற்பனையில் ஆக்டிவாதான் முன்னிலையில் உள்ளது. இந்த மாதமும் அதே நிலைதான். மொத்தம் 2,86,380 ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது ஹோண்டா. ஹோண்டாவுக்கு அடுத்தபடியாக இருப்பது ஹீரோ ஸ்ப்ளெண்டர். HF டீலக்ஸ், பேஸன், கிளாமர் என டாப் 10 பட்டியலில் 4 ஹீரோ பைக்குகள் உள்ளன. டிவிஎஸ்ஸின் XL சூப்பர் மொப்பட் மற்றும் ஜூபிட்டர் ஸ்கூட்டரும் டாப் 10 விற்பனையில் உள்ளன. கம்யூட்டர் செக்மன்டில் CT100 புதுவரவு.

பஜாஜ் பல்ஸர், கிளாசிக்-டிவின் டிஸ்க் என இரண்டு வேரியன்டுகளாகப் பிரிந்த பிறகும் அதன் விற்பனையில் சரிவில்லை. டாப் 10 விற்பனையில் புதிதாக இணைந்துள்ளது பஜாஜ்  CT100. ஒரே மாதத்தில் 76,776 பைக்குகளை விற்பனை செய்து நேரடியாக 6-ம் இடத்துக்கு வந்துவிட்டது. கடந்த ஆண்டைவிட இது 87 சதவிகிதம் அதிக விற்பனை. CT100 விற்பனைக்குக் காரணம் பஜாஜின் விலை தள்ளுபடி. 37,600 ரூபாய்க்கு விற்கப்படும் இது தற்போது இந்தியாவிலேயே விலை குறைவான பைக். போட்டியாளர்களாக இருக்கும் ஹீரோ HF டீலக்ஸ் 56,710 ரூபாய்க்கும், டிவிஎஸ் ஸ்டார் ஸ்போர்ட் 58.000 ரூபாய்க்கும் கிடைக்கிறது. சமீபத்தில் CT100 பைக்கின் விலையை 5,000 ரூபாய் வரை குறைத்திருந்தது பஜாஜ். இந்தப் பைக் விற்பனையாவதற்கு பஜாஜின் விலை குறைப்புதான் காரணம். கடந்த மாதங்களைப் போலவே ஆக்டிவாவுக்குப் பிறகு, அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஜூபிட்டர் உள்ளது. இம்முறை 66,632 யூனிட்டுகள் விற்பனை செய்து விற்பனையில் 9-ம் இடத்தில் உள்ளது.

Sponsored


ஜூலை விற்பனைபடி டாப் 10 டூ-வீலர்கள்

Sponsored




Trending Articles

Sponsored