வீட்டுக்கு அழகு சேர்க்கும் வால் பேப்பர்.... எந்த அறைக்கு ஒட்டலாம்?



Sponsored



சையாக ரசித்துக் கட்டிய வீட்டின் அவுட்லுக் என்பது, அந்த வீட்டின் இன்டீரியர் டிசைனில்தான் இருக்கிறது. பெட்ரூமுக்கு கூல் கலர், ரிசப்சனுக்கு வார்ம் கலர், கிச்சனுக்கு நியான் கலர் எனப் பார்த்துப் பார்த்து வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவால். என்னதான் ரசனையுடன் வீட்டைக் கட்டியிருந்தாலும், சில சமயம் தவறான பெயின்ட் செலக்க்ஷன், மொத்த அழகையும் கெடுத்துவிடும். வீட்டில் ஒரே மாதிரியான வண்ணத்தையே பார்த்துப் பார்த்து போர் அடிக்கிறது என்பவர்கள், சுவரின் விரும்பும் இடங்களில் வால் ஆர்ட், தீம் வால் ஸ்டிக்கர், வால் டெக்ஸ்டர் மூலம் அலங்கரிப்பது லேட்டஸ்ட் டிரெண்டு. அதில், லேட்டஸ்ட் அப்டேட் சுவர் முழுவதுமோ அல்லது தேவையான இடங்களிலோ ஒட்டிக்கொள்ளும் வால் பேப்பர். இது, உங்கள் வீட்டை கலைநுட்பத்துடன் வண்ணமிட்ட தோரணையை அளிக்கும். உங்கள் வீட்டுக்கான சுவர் அலங்காரத் தேர்வு, பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றிய அடிப்படைத் தகவலைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த ஆர்க்கிடெக் மற்றும் இன்டீரியர் டிசைனர், ஶ்ரீபிரியா.

வால் ஆர்ட்:

வால் ஆர்ட் என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் மியூரல் வேலைப்பாடுகளோ, வித்தியாசமான உருவத்தில் பெயின்ட்டிங்கோ செய்துகொள்வது. இது, அறையின் குறிப்பிட்ட இடத்தின் அழகை மெருகேற்றிக் காண்பிக்கும். இப்போதெல்லாம் நிறைய பெண்கள் வீட்டிலே மியூரல் வேலைப்பாடு, பெயின்ட்டிங் கற்றுக்கொள்கின்றனர். அப்படி உங்களுக்கும் தனித்திறமை இருந்தால், நீங்களே வித்தியாசமாக ட்ரையல் மேற்கொள்ளலாம்.

Sponsored


Sponsored


வால் ஸ்டிக்கரிங்:    

வால் ஸ்டிக்கரிங் செய்ய விரும்புபவர்கள், குறைந்த பட்ஜெட்டில் செய்துகொள்ளலாம். ரெடிமேட்டாகக் கிடைக்கும் வால் ஸ்டிக்கர்களை ரசனைக்கு ஏற்ப தேர்வுசெய்து வீட்டில் ஒட்டலாம். வால் ஸ்டிக்கர் உங்கள் சாய்ஸ் எனில், ஆன்லைனிலும் தேர்வுசெய்து கொள்ளலாம். அல்லது, இன்டீரியர் டிசைனர்களின் உதவியை நாடலாம். 

சுவர் முழுவதுமே கலைநயத்துடன் இருக்க வேண்டும் என்பவர்கள், வால் பேப்பர்களைத் தேர்வுசெய்யலாம். இதில் ஓவன், நான் ஓவன், ஹேண்டு மேட் எனப் பல வகையான மெட்டீரியல்கள் கிடைக்கின்றன.வீட்டுக்கு கிளாசிக் லுக் விரும்புபவர்கள், நான் ஓவனைத் தேர்வுசெய்யலாம். டிரெண்டி லுக் வேண்டும் என்பவர்கள், ஓவன் மெட்டீரியலைத் தேர்வுசெய்யலாம். வித்தியாசமான லுக் விரும்புபவர்களுக்கு, ஹேண்ட்-மேட் மெட்டீரியல் பொருத்தமாக இருக்கும்.

வால் பேப்பர்கள்:

வால் பேப்பர்களைப் பொறுத்தவரை, எந்த இடத்துக்கு எந்த டிசைனை, எந்த வடிவத்தில் தேர்வுசெய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது அதன் அழகு. சிலர் வீட்டின் எல்லா அறைக்கும் வால் பேப்பர்களைப் பயன்படுத்த நினைப்பார்கள். இது தவறான ஐடியா. சில அறைகளுக்கு மட்டுமே பயன்படுத்தும்போதுதான் அதன் அழகை ரசிக்க முடியும். எல்லா அறைகளுக்கும் எனில், வீட்டின் அழகையே கெடுத்துவிடும்.

பெட்ரூமுக்கு வால்பேப்பர் தேர்வுசெய்வதாக இருந்தால், வெளிர் நிறங்களில் மாயத் தோற்றங்கள் நிறைந்தவற்றைத் தேர்வுசெய்யலாம்.

குழந்தையின் படிக்கும் அறைக்கு எனில், அவர்களைச் செயல்படத் தூண்டும் தன்னம்பிக்கையுடன் கூடிய படங்ளைத் தேர்வுசெய்யலாம்.

வரவேற்பறைக்கு எனில், கற்பனைத்திறனைத் தூண்டும் படங்கள் அழகூட்டும்.

குழந்தைகளின் உறங்கும் அறைக்கு, கார்டூன், விளையாட்டுப் படங்கள் சூப்பராக இருக்கும்.

சமையலறைக்கு எனில், மைல்டு கலரில் சீக்குவன்ஸ் டிசைன் கொண்டவை பெஸ்ட் சாய்ஸ்.

இவை தவிர்த்து, குறிப்பிட்ட தீமிலும் உங்கள் அறைக்கான வால் போஸ்டரை வடிவமைத்துக்கொள்ளலாம். ஒரு வண்ணம், ஒரு டிசைன் கொண்ட சிங்கிள் டிசைன் போஸ்டர்கள், பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள்கொண்ட கொலாஜ்கள் என வால் பேப்பருக்கான வாசல், பரந்து விரிந்துள்ளது.

விலை:

ஒரு சதுர அடிக்கு 3500 ரூபாயிலிருந்து லட்சங்கள் வரை வடிவத்துக்கு ஏற்ப உள்ளன.

பராமரிக்கும் முறை:

ஏற்கெனவே பெயின்ட் செய்த சுவரில் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். இவற்றில் ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் துடைத்துவிட முடியும். உங்களின் பராமரிப்பைப் பொறுத்து, 6 வருடங்கள் வரை பொலிவுடன் வைத்துக்கொள்ளலாம். இதற்கு இடையில் வேறு டிசைன் மாற்ற விரும்புபவர்கள், ஏற்கெனவே இருக்கும் ஸ்டிக்கரைப் பிரித்துவிட்டு, அதே இடத்தில் புது பேப்பர் ஒட்டிக்கொள்ளலாம்.

வால் பேப்பர் ஏதேனும் ஓரிடத்தில் மட்டும் கிழிந்துவிட்டால், அதே அளவுக்கு அதே டிசைனில் வால் போஸ்டர் ஒட்டிக்கொள்ளலாம். பெயின்டைவிட வால் போஸ்டர்கள் உங்கள் இல்லத்தைப் பல மடங்கு ரசனையுடன் காண்பிக்கும்.

ரசனையால் வீட்டின் அழகை மெருகேற்றுவோம்!



Trending Articles

Sponsored