செப்டம்பரில் களமிறங்கும் மராஸோவில் என்ன எதிர்பார்க்கலாம்?செப்டம்பர் 3, 2018 அன்று, தனது பிரிமியம் எம்பிவியான மராஸோவை (U321) அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா. எப்படிச் சிறுத்தையை அடிப்படையாகக் கொண்டு XUV 5OO வடிவமைக்கப்பட்டதோ, அதேபோல சுறாவை அடிப்படையாகக் கொண்டு மராஸோவை அந்த நிறுவனம் டிசைன் செய்திருக்கிறது. 

Sponsored


மஹிந்திராவின் பாணியில், இந்த எம்பிவியின் பெயர் 'O'-வில் முடிவது சிறப்பு. பெயர்க் காரணம் என்னவென்றால், ஸ்பானிஷ் பாஷையில் மராஸோ என்றால் சுறா என அர்த்தமாம்! மஹிந்திராவின் வரலாற்றில் நீளமான பாசஞ்சர் வாகனமாக இருக்கும் இது, XUV 5OO மற்றும் KUV 1OO-வுக்கு அடுத்தபடியாக மோனோகாக் சேஸியில் தயாரிக்கப்பட உள்ளது. 

Sponsored


மராஸோ ஒரு க்ளோபல் தயாரிப்பாக இருக்கும்

Sponsored


வட அமெரிக்காவில் உள்ள மஹிந்திராவின் தொழில்நுட்ப மையம் & சென்னையில் உள்ள ஆராய்ச்சி மையம் இணைந்து, காரின் பொறியியல் பணிகளை மேற்கொண்டுள்ளன. PininFarina - மஹிந்திராவின் டிசைன் குழு சேர்ந்து மரோஸோவை டிசைன் செய்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சர்வதேச மற்றும் இந்தியக் கூட்டணி காரணமாக, சிறப்பான ஏரோடைனமிக்ஸ் மற்றும் ஓட்டுதல் அனுபவம் உறுதி என்கிறது மஹிந்திரா. 

இந்த நிறுவனத்தின் நாசிக் தொழிற்சாலையில் தயாராகப்போகும் இந்த எம்பிவியில், புதிய 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் (130bhp/30kgm) - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வெளிவர உள்ளது. மாருதி எர்டிகா மற்றும் ரெனோ லாஜிக்குப் போட்டியாக மராஸோ களமிறங்குகிறது; ஆனால் ஸைலோவும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. எம்பிவிகளில் 'தல'யான இனோவாவுக்கும் இது கடும் சவால் அளிக்கலாம்.

டிசைன், கேபின், சிறப்பம்சங்கள் எப்படி?

காரின் வெளிப்புறத்தில் மஹிந்திராவின் டிரேட்மார்க் க்ரோம் கிரில், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED டெயில் லைட்ஸ், 16 இன்ச் அலாய் வீல்கள், DRL உடனான பனி விளக்குகள், இண்டிகேட்டர் உடன் கூடிய மிரர்கள், ரியர் வைப்பர் & ஸ்பாய்லர், ரிவர்ஸ் கேமரா, க்ரோம் ஃப்னிஷ், Shark Fin Antenna என மராஸோ அசத்துகிறது. ஒரு காரில் ரியர் வியூ மிரர்கள், வழக்கமாகக் காரின் கதவுகளில் ஃபிட் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இங்கே பில்லரில் இருப்பது செம ஸ்டைல். மிட் வேரியன்ட்களிலும் அலாய் வீல் இருக்கும் எனத் தெரிகிறது. 

உட்புறத்தில் பியானோ ப்ளாக் & க்ரோம் வேலைப்பாடு உடன் கூடிய டூயல் டோன் (கறுப்பு-பீஜ்)டேஷ்போர்டு - Leatherette சீட்கள் உள்ளன. இதனுடன் பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7/8 சீட் ஆப்ஷன், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மிரர்கள், MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், க்ரூஸ் கன்ட்ரோல் என கேபின் கவர்கிறது. கேபின் டிசைன் அதிரடியாக இல்லாவிட்டாலும், பார்க்க நீட்டாக இருக்கிறது. 

பாதுகாப்பு வசதிகள், புக்கிங் விவரங்கள்

கூடுதலாக Surround Cool தொழில்நுட்பத்துடன் கூடிய அனைத்து வரிசை இருக்கைகளுக்குமான ஏசி சிஸ்டம், காரின் ரூஃப்பில் இடம்பெற்றுள்ளது. மராஸோவின் அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப்பைகள், ABS, EBD, ரியர் பார்கிங் சென்ஸார் ஸ்டாண்டர்டு! இந்த எம்பிவியின் கட்டுமானத் தரம் மற்றும் கேபின் சத்தம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியிருக்கும் மஹிந்திரா, இதற்காக உலகத் தரத்தில் டெஸ்ட்டிங் செய்திருக்கிறது. இதன் புக்கிங் Un-Official ஆகத் தொடங்கி விட்டதால், மஹிந்திரா டீலர்களில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி இந்தக் காரை புக் செய்யலாம். Trending Articles

Sponsored