சத்யம் சினிமாஸில் இனி இலவசமாக டிஜிட்டல் இதழ்களும் வாசிக்கலாம்Sponsoredசென்னையின் பிரபல மல்டி ஃப்ளெக்ஸ் நிறுவனமான SPI சினிமாஸ் பல புதிய முயற்சிகளால் வாடிக்கையாளர்களைக் கவர்வது வழக்கம். அதில் ஒன்றாக இப்போது, Magzter என்ற நிறுவனத்துடன் இணைந்து தங்களது மல்டிஃப்ளெக்ஸ் வளாகங்கள் மற்றும் உணவகங்களை "Smart Reading Zone" என்ற இலவச வாசிப்பு மண்டலங்களாக அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்த மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாளிதழ்கள் மற்றும் மாத இதழ்களை உங்கள் மொபைல்களிலேயே இலவசமாக வாசிக்க முடியும்.  

முன்பு, SPI நிறுவனத்தின் சத்யம், எஸ்கேப், பலாசோ, எஸ்2 போன்ற திரையரங்குகளின் வெளியே, SPI நிறுவனத்தின் சொந்த சினிமா இதழ்கள் வாசிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும். இதை, காத்திருக்கும் நேரத்திலோ, இடைவேளையிலோ வாசிக்க முடியும். இப்போது Magzter என்ற டிஜிட்டல் நியூஸ் ஸ்டாண்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளதால், Filmfare, Stardust போன்ற சினிமா இதழ்கள் தொடங்கி உள்ளூர் பொழுதுபோக்கு இதழ்கள் வரை 5000-த்துக்கும் மேற்பட்ட இதழ்களையும் Magzter நிறுவனத்தின் செயலிமூலம் திரையரங்க வளாகங்களுக்குள் இனி வாசிக்க முடியும். இந்திய இதழ்கள் மட்டுமின்றி முக்கிய சர்வேதச இதழ்களும் இந்தச் சேவையில் இடம்பெற்றுள்ளன. இந்தச் சேவையை வெளியில் பெற மாதம் 399 ரூபாய் வரை கட்டவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored


Geo-Fencing என்ற தொழில்நுட்பத்தின்மூலம் இதை சாத்தியப்படுத்தியுள்ளன இந்நிறுவனங்கள். எனவே, இனிமேல் சத்யம் சினிமாஸ் சென்றால், பாப்கார்னுடன் கொஞ்சம் வாசிக்கவும்செய்யலாம். 

Sponsored
Trending Articles

Sponsored