புதிய விதிமுறைகளால் வாகனத்தின் இன்ஷூரன்ஸ் விலை உயர்கிறதா? #FAQSponsoredசெப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகனம் வாங்குபவர்களுக்கு long term third party இன்ஷூரன்ஸைக் கட்டாயமாக்கியுள்ளது உச்ச நீதிமன்றம். அதன்படி, இனி ஓர் ஆண்டுக்கு மட்டும் இன்ஷூரன்ஸ் வாங்க முடியாது. இன்ஷூரன்ஸ் தொகையை மொத்தமாகக் கட்டுவது நமக்கு நஷ்டமா, `நோ க்ளெயிம் போனஸ்' எப்படிக் கணக்கிடப்படும், இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் விலை மாறுமா... போன்று பொதுவாகக் கேட்கப்படும் FAQ-களை, பாலிசி பஜார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தருண் மாத்தூரிடம் கேட்டோம்.

``லாங் டெர்ம் TP இன்ஷூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டது, புது வாகனங்களுக்கு மட்டுமா அல்லது புதுப்பிக்கப்படும் இன்ஷூரன்ஸ்களுக்கும் சேர்த்தா?''

``செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு புதிதாக கார் வாங்குபவர்கள் கட்டாயம் மூன்று ஆண்டும், பைக் வாங்குபவர்கள் ஐந்து ஆண்டும் TP ப்ரீமியம் செலுத்தவேண்டும். பழைய இன்ஷூரன்ஸ் புதுப்பிப்பவர்களுக்கு இது கட்டாயமில்லை.''

Sponsored


``விதிமுறைகள் மாறுவதால், ஓராண்டு பாலிசி நிறுத்தப்பட்டு புதிய பாலிசி உருவாக்கப்படுமா?''

Sponsored


```லாங் டெர்ம் TP இன்ஷூரன்ஸ் வழங்க வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற விதிமுறையைத் தாண்டி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இரண்டுவிதமான பாலிசியை உருவாக்கலாம் என  IRDAI பரிந்துரைத்துள்ளது. அதன்படி TP இன்ஷூரன்ஸுடன் சேர்த்து லாங் டெர்ம் OD இன்ஷூரன்ஸ் ஆகவும் (இதை  comprehensive என்பார்கள்), TP இன்ஷூரன்ஸ் மட்டும் லாங் டெர்மாக OD இன்ஷூரன்ஸ் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கும்படியும் (இதை bundled பாலிசி என்பார்கள்) இருக்கலாம். சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஏற்கெனவே comprehensive பாலிசி வைத்துள்ளன. இனி, எல்லா நிறுவனங்களும் இந்த இரண்டு பேக்கேஜையும் கொடுப்பார்கள். ''

``இந்த பாலிசிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது?''

``comprehensive பாலிசியைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியான முடிவு. மூன்று ஆண்டுக்குச் சேர்த்து ஒருமுறை ப்ரீமியம் செலுத்தினாலே போதுமானது. ப்ரீமியம் விலை ஏற்றம் பற்றிக் கவலைப்பட தேவையில்லை.''

``புதிய விதிமுறைகளில் உள்ள குழப்பங்கள் என்னென்ன?''

``நோ க்ளெயிம் போனஸ், ஐடிவி போன்றவை எப்படி வழங்கப்படும் என்பதை உச்ச நீதிமன்றம், IRDAI இரண்டுமே தெளிவுபடுத்தவில்லை. இதனால், எப்படிக் கணக்கிடப்படும் என்பதில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கே குழப்பம் உள்ளது. நோ க்ளெயிம் போனஸின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குரியது. ஐடிவி குறையும்போது ப்ரீமியம் விலை குறையும். மூன்று ஆண்டுக்குச் சேர்த்து ப்ரீமியம் கட்டுவதால், ஐடிவி மட்டுமே குறையும்... ப்ரீமியம் குறையாது. இதை எப்படிக் கணக்கிடப்போகிறார்கள் என்பதும் கேள்விக்குரியது. செப்டம்பர் 15-ம் தேதிக்கு முன் புதிய பாலிசிகளும் அதற்கான விதிமுறைகளும் வந்துவிடும். அப்போது இந்தக் குழப்பங்களுக்குத் தெளிவு கிடைக்கலாம். மூன்று ஆண்டு TP-யுடன் ஓராண்டு OD இன்ஷூரன்ஸ் இருக்கும் பாலிசியைப் பயன்படுத்துபவர்கள், ஓராண்டு கழித்து புதிய பாலிசிக்கு மாற முடியாது. அதே பாலிசியில் அடுத்த ஆண்டு ப்ரீமியம் கட்டவேண்டும். புதிய பாலிசிக்கு மாறினால், பழைய TP கேன்சல் ஆகி, மீண்டும் முதலில் இருந்தே பணம் செலுத்தவேண்டிவரும்.''

``ப்ரீமியம் விலை உயருமா?''

``கார்களைப் பொறுத்தவரை 1000cc குறைவான கார்களுக்கு முதல் ஆண்டு ப்ரீமியம் விலையைக் குறைத்துவிட்டு, 1000-1500cc கார்களுக்கும், 1500cc அதிமாக கார்களுக்கும் ப்ரீமியம் விலையை உயர்த்தியுள்ளார்கள். குறைந்தபட்ச ப்ரீமியம் விலையிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் 20 சதவிகிதத்தை IRDAI உயர்த்திவருகிறது. தற்போது வந்திருக்கும் புதிய விலை, செப்டம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரை மட்டுமே.Trending Articles

Sponsored