இனி போட்டித் தேர்வுகளில் சுலபமாக ஜெயிக்கலாம்! - Sponsored Content.Sponsoredவருடந்தோறும் லட்சக்கணக்கில் இந்திய இளைஞர்கள் அரசுப் பணியிடங்கள் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர். தற்போது இந்தியாவில், முக்கியமாக தமிழகத்தில் ஹாட் டாப்பிக்காக இருப்பது மருத்துவ நுழைவுத் தேர்வான NEET தேர்வு. 13 லட்சத்து இருபதாயிரத்து சொச்சம் மாணவர்கள் 2018 நீட் தேர்வில் கலந்துகொண்டனர், இதில் கவுன்சிலிங்கிற்கு தேர்வாகியிருப்பவர்கள் பாதிபேர்தான்.

"இந்தியாவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வுகளுக்கும் சரி, போட்டி போட்டு தேர்வு எழுதுபவர்களுக்கும் சரி பஞ்சமே இல்லை. ஆனால் இதில் எத்தனை பேர் நினைத்தபடி தேர்வில் ஜெயித்து, வேண்டிய பணியிடங்களிலோ, கல்வி வகுப்புகளிலோ சேருகிறார்கள் எனத் தேர்வு எழுதுபவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அந்த எண்ணிக்கை மிகமிக சொற்பமாகவே இருக்கிறது. இருந்தாலும் தோல்வி அடைபவர்களுக்கு விஷயம் தெரியவில்லை என நாம் ஒதுக்கிவிட்டால் இந்தியாவில் முக்கால்வாசி வேலைகள் நடக்காது. எங்கே இவர்கள் சறுக்குகிறார்கள் என்பதைக் கண்டுகொண்டு, அதற்கேற்றவாறு அவர்களுக்கு பயிற்சி வழங்குதல் முக்கியம். அதோடு, போட்டித் தேர்வு எழுதுவதற்கும், அதற்கு தயாராவதற்கும் நம் மனநிலையை மாற்றியமைப்பது முக்கியம்," என்கிறார் ஐ.ஏ.எஸ். பயிற்சியாளரான டாக்டர் வீ. குளஞ்சியப்பா.

Sponsored


என்ன மனநிலை தேவை?

Sponsored


 "போட்டித் தேர்வு எழுதுவது என்பது ஒருவகையில் மன அழுத்தத்தை தரக்கூடியது என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். இன்றைய மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு படாத பாடுபடும்போது, கூடவே நீட் (போன்ற தேர்வுகளை) எழுத நீ கூடுதலாக உழைக்கவேண்டும் எனப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களைக் குடைவது சரியல்ல. நம் முன்னேற்றத்துக்காகவே தேர்வுகளை எழுதுகிறோம், தேர்வு நமக்கானது, அதைக் கண்டு பயப்படத்தேவையில்லை, வெற்றியடைந்தால் மகிழ்ச்சி, தோல்வியுற்றால் மறுதேர்வு அல்லது வேறு தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்கிறநேர்மறை எண்ணத்தோடு தேர்வுகளைக் கையாள மாணவர்களுக்குச் சொல்லித்தரவேண்டும்."

"அடுத்து பயிற்சி. பயிற்சி என்பது ஒரு வேலையல்ல, அதை ஒரு பழக்கமாக தேர்வு எழுதுபவர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும். விராட் கோலி ஒரு பேட்டியில், 'தினமும் வலைப் பயிற்சி செய்வேன், பிறகு உடற்பயிற்சி செய்வேன், ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வேன், பிறகு நன்றாக ஓய்வெடுப்பேன்' என்கிறார். இதைக்கேட்கவே போர் அடிக்கலாம், ஆனால் இதை ஒருநாள் இருநாள் அல்ல, தினந்தோறும் ஒழுக்கத்தோடு கடைபிடிப்பதால்தான் பலரும் எட்டமுடியாத உயரங்களை கோலி இந்த இளம்வயதில் எட்டியிருக்கிறார். தேர்வுக்கு பயிற்சி எடுத்துக்கொள்வதற்கான மன நிலையும் இதுதான். என்ன செய்தால் வெற்றி கிடைக்கும் என முதலில் அலசுங்கள், அதை தினந்தோறும் செய்யும் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள், ஒழுக்கம் என்பதே மேன்மையின் இரகசியம். வெற்றி ஆடுகளத்தில் தீர்மானிக்கப்படுவதல்ல, பயிற்சியின்போதே அது நிர்ணயம் ஆகிறது!"

ஸ்பெஷல் வகுப்புகளுக்குச் செல்லலாமா?

"பிற மாணவர்களோடு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிலும்போது போட்டி போட்டு படிக்கலாம். இங்கே அவ்வப்போது நம் தேர்வுகுறித்த அறிவை சோதிக்கும் பரிட்சைகள் நடத்தப்பட்டால் மிகநல்லது. வெற்றிபெறவேண்டும் என்கிற இலக்கைக் கொண்ட, நேர்மறையான எண்ணம் கொண்ட ஒரு குழுவோடு கலந்து படிப்பதால், நம் மன உற்சாகம் எப்போதும் அதிகமாகவே இருக்கிறது. போட்டி, தேர்வு ஆகியவற்றில் வெல்ல இதுவே சிறந்த மனப்பாங்காகும்."

பிரிஸ்மா அகாடெமி

டாக்டர் குளஞ்சியப்பா தலைமையில், அண்ணா நகரில் இயங்கிவரும் பிரிஸ்மா அகாடெமி NEET, AIIMS, JIPMER, JEE Mains & Advanced ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது. பயிற்சி வகுப்புகளுக்கு முக்கியம் சிறந்த பயிற்றுநர்கள் என்பதால், மேற்கண்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை பணியமர்த்தியுள்ளது பிரிஸ்மா. இங்கு தினந்தோறும் நடத்தப்படும் பாடங்களுக்கு அவ்வப்போது தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. தற்போது 2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்துள்ள பிரிஸ்மா அகாடெமி, தினந்தோறும் மற்றும் வார இறுதிகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது. மேலும், 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடிப்படை பாடப்பிரிவுகளுக்கான (Foundation Course) வகுப்புகளையும் நடத்திவருகிறது. கடந்த வருட நீட் தேர்வில், இங்கு பயின்ற 50% மாணவர்கள் தேர்ச்சியடைந்து அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தில் பின்னிலையில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாடங்களை வழங்கிவருகிறது பிரிஸ்மா. இவ்வகுப்புகளில் சேர மற்றும் மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட படிவத்தைப் பூர்த்திசெய்யவும்.
 Trending Articles

Sponsored