‘ராவணஹத்தா' - ஒர் இசைக்கருவியின் பயணம்Sponsoredஇசை, காலம் கடந்து பயணிக்கும். இசைக் கருவிகளும் அதன் தன்மைக்கேற்ப புலம்பெயரும்‌. அப்படி புலம்பெயர்ந்த மறக்கப்பட்ட இசைக் கருவிதான் ராவணஹத்தா. ராஜஸ்தான் கோட்டைகளிலும், வீதிகளிலும் மனதை உருக்கும் மெல்லிய இசைக் இசைத்துக் கொண்டிருக்கிறது இந்த ராவணஹத்தா. 

ராவணஹத்தா (ராவணஷ்ட்ரோன், ராவண ஹஸ்த வீனா) என்று பல்வேறு பெயர்களால் வழங்கபடுகிறது‌. இக்கருவி இலங்கையில் ஈழ பண்பாட்டு  நாகரிகத்தின் போது தோன்றியதாகத் தெரிகிறது. இது இலங்கை மற்றும் தமிழ் கடலோர முக்குவார் சமூக மக்களிடம் பெரும்பாலும் அறியபட்டது‌. 

Sponsored


ராமாயண இதிகாசம் இக்கருவியை உருவாக்கியது என்றும் மற்றொரு கதை பேசப்படுகிறது. இலங்கை அரசரான ராவணன் தீவிர சிவபக்தி உடையவர் தன் பக்தியை வெளிப்படுத்த இக்கருவியை மீட்டியுள்ளார். இது ராவணனின் பிரியமான இசைக்கருவி. இறுதி போரில் ராவணன் வீழ்த்தப்பட்ட பிறகு அனுமான் இக்கருவியை வட இந்தியாவிற்கு கொண்டுவந்துள்ளார் என்கிறார்கள். அன்று முதல் இன்று வரை வட மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் தொடர்ச்சியாக இசைக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் இளவரசர்கள் இக்கருவியை ஆர்வமுடன் கற்றும் வந்துள்ளனர். இக்கருவி தற்போது 'நாத் பவாஸ்‌' என்ற சமூக மக்களே இசைத்துக் கொண்டிருக்கின்றனர்.  அவர்கள், `ராவணனே, ராவணஹத்தாவை தங்கள் சமூகத்துக்கு கொடுத்துள்ளார்’ என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். ராவணஹத்தா என்ற சிங்கள மொழிச் சொல்லுக்கு `ராவணனின் கை’ என்று பொருள். 

Sponsored


இக்கருவி 80-90 செ.மீ மூங்கிலால் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மெட்டல் பைப்களும், ஒரு முனையில் தேங்காய் ஓடாலும் இணைக்கப்பட்டுள்ளது. அதை மூடியவாறு ஆட்டின் தோல் சுற்றப்பட்டுள்ளது. அதன் நரம்புகள் குதிரையின் முடிகளாலும் மெல்லிய கம்பிகளாலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை இசைக்க வில் பயன்படுத்தப்படுகிறது. இதை தற்கால இசைக்கருவியான வயலினின் முன்னோடி என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வரலாற்றை அறியும்போது புலம்பெயர்  கருவியான ராவணஹத்தா உலக கலாசாரத்தை எப்படி செழுமைப்படுத்தியது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது‌.

அரசர் ஆண்ட காலம் முதல் தங்கள் வலிகளை எளிய மக்கள் ராவணஹத்தாவின் வழியே கடத்தியுள்ளனர். ஒரு காலத்தில் அரசர்களின் மகிழ்ச்சிக்காக  இசைக்கப்பட்ட கருவி, தற்போது தங்களின் வருமையும், நீரற்ற நிலத்தையும் என்னி இசைக்கின்றன. அரச வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்திய ராவணஹத்தா எளிய மக்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துமா?.Trending Articles

Sponsored