ஐ.ஐ.டி-யில் சேர்க்கத் திட்டமா... விண்ணப்பிக்கவேண்டிய நேரம் இது!Sponsoredஐஐடி - ஜேஇஇ (IIT - JEE) தேர்வு எழுதுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, மத்திய அரசின் தேசிய தகுதித்தேர்வு நிறுவனம் (National Testing Agency). இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி (IITs)-க்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (NITs) மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம்.

`ஐஐடி - ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு, செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என்று நுழைவுத் தேர்வை நடத்தவுள்ள தேசிய தகுதித் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை ஐஐடி-ஜேஇஇ முதல்நிலை (IIT JEE Main Exam) நுழைவுத் தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திவந்தது. இனி, மத்திய அரசு புதியதாக ஏற்படுத்தியுள்ள `தேசியத் தேர்வு நிறுவனமே', மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் (NEET) தேர்வையும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் தொழிற்படிப்பில் சேர ஐஐடி-ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளையும், இதர தகுதித் தேர்வுகளையும் நடத்தவுள்ளது.

Sponsored


ஐஐடி-ஜேஇஇ முதன்மைத் தேர்வு (IIT JEE Main exam), ஜனவரி 6-ம் தேதி முதல் 20-ம் வரை நடத்தப்படும் என்றும், இது கணினிவழித் தேர்வாக (Computer Based Test (CBT)) நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில், இரண்டு தாள்கள் இருக்கும். முதல் தாள், பி.இ/பி.டெக் படிக்கத் திட்டமிட்டிருப்பவர்கள் எழுதலாம். இந்தத் தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாள், பி.ஆர்க் / பி.ப்ளானிங் படிப்பவர்களுக்கானது. இந்தத் தேர்வில் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் கணிதப் பாடத்திலும், திறனறிவுப் பிரிவிலுமிருந்து கேள்விகள் கேட்கப்படும். இதுவும் கணினிவழித் தேர்வாக இருக்கும். இரண்டாவது பிரிவில் வரைகலை சார்ந்த தேர்வு நடத்தப்படும். இதை தாள்வழித் (`Pen & Paper Based' offline) தேர்வாக நடத்தப்படும். வரைகலையில் ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் இரண்டு தாள் தேர்வுகளையும் எழுதலாம்.

Sponsored


ஐ.ஐ.டி - ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், அட்வான்ஸ் (IIT - JEE Advanced) தேர்வுக்குத் தகுதிபெறுவார்கள். இவர்களுக்கான தேர்வு, வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IIT - JEE Advanced தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான விளம்பரம், பிறகு அறிவிக்கப்படும். ஐ.ஐ.டி-ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் முதல் தாள் அல்லது இரண்டாவது தாள் எழுத விரும்பினால், பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த மாணவர் 500 ரூபாயும், மாணவி 250 ரூபாயும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 250 ரூபாயும் செலுத்த வேண்டும். இரண்டு தாள்களையும் சேர்த்து எழுதுபவர்களாக இருந்தால், பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த மாணவர் 900 ரூபாயும், மாணவி 450 ரூபாயும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனப் பிரிவைச் சார்ந்தவர்கள் 450 ரூபாயும் விண்ணப்பிக்கக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

செப்டம்பர் மாதத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் முதல் முயற்சியில் தேர்வுபெறவில்லை என்றால், இரண்டாவது முயற்சியாகத் தேர்வு எழுதவும் வாய்ப்பு வழங்கப்படும். இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, அடுத்த ஆண்டு 08.02.2019 முதல் 07.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஐஐடி- ஜேஇஇ முதன்மைத் தேர்வில், 2016-ம் ஆண்டில் அல்லது அதற்கு முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. மேலும், எந்த நகரத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பதை நான்கு நகரங்களின் பெயரை முன்னரே தேர்ந்தெடுத்துக் குறிப்பிட வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகரில் மையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவியின் புகைப்படம், விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டண விவரங்கள் போன்றவை, ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். மற்ற சான்றிதழ் எதையும் ஸ்கேன் செய்து அனுப்பவேண்டியதில்லை. விண்ணப்பத்தில் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் அல்லது ஆதார் எண் பெறுவதற்கான விண்ணப்பத்தின் எண்ணைக் குறிப்பிட வேண்டும். ஆன்லைன் வழியே மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இவ்வாறு விண்ணப்பிக்கும்போது, கணினிவழியே விண்ணப்ப எண் வழங்கப்படும். அந்த எண்ணைக் குறிப்பிட்டே ஹால் டிக்கெட் போன்றவற்றை டவுன்லோடு செய்ய வேண்டும். ஹால் டிக்கெட்டை டிசம்பர் 17-ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் வினாத்தாள் இருக்கும். தேர்வானது, குறிப்பிட்ட கேள்விக்கு நான்கு விடைகள் வழங்கப்பட்டிருக்கும். அதிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இருக்கும்.

ஐஐடி- ஜேஇஇ முதன்மைத் தேர்வில் என்னென்ன பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டும் என்பதற்கான பாடத்திட்டத்தையும், மாதிரித் தேர்வை எழுதிப் பார்ப்பதற்கான முறைகள் குறித்தும் www.nta.ac.in மற்றும் www.jeemain.nic.in தளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.Trending Articles

Sponsored