மணப்பெண்ணை ஜொலிக்கச் செய்யும் தங்கம், வைரம், பிளாட்டினம் ஃபேஷியல்! #Beauty



ஆடி மாதம் முடிந்துவிட்டது. இனி நிறைய வீடுகளில் மேளம் கொட்ட ஆரம்பிக்கும். ஒரு சில பெண்களுக்குக் கல்யாணத்துக்கு 3 மாதங்கள் அவகாசம் இருக்கும். சிலருக்கோ அதிகபட்சமாக 6 வாரங்கள், அதாவது ஒன்றரை மாதம்தான் நேரம் இருக்கும். இவ்வளவு குறுகிய நேரத்தில் பார்லரில் என்னென்ன ஃபேஷியல்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதே நேரம் வீட்டிலும் அழகாகச் சருமம் மற்றும் கூந்தலுக்காக எப்படியெல்லாம் மெனக்கெட வேண்டும் என்று டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் மோனிஷா பிரசாந்த்.

Sponsored


வீட்டில் செய்ய வேண்டியவை...

Sponsored


* திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து, உடலில் சூடு பிடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் கூந்தலும், சருமமும் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் மின்னும். 

Sponsored


*  எண்ணெய் வைக்கப் பிடிக்காதவர்கள் ஹேர் சீரம் பயன்படுத்தலாம். இதில் வறண்ட கூந்தலைச் சரி செய்ய சீரம், தலை ஸ்கால்ப்புக்கான சீரம், முடி வளர்ச்சியைத் தூண்டுகிற சீரம் என்று பல விதமாக இருக்கின்றன. உங்கள் கூந்தலுக்குத் தேவையானதை வாங்கிப் பயன்படுத்துங்கள். 

* பாதாம் எண்ணெயில் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான அரோமா எண்ணெய்களைக் கலந்து சில பார்லர்களிலும், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கியும் பயன்படுத்தலாம். 

* பப்பாளி அல்லது ஆப்பிளை பாலுடன் சேர்த்து அரைத்து முகம், கழுத்து, முதுகு என்று தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி விடுங்கள். சருமத்துக்குப் புத்துணர்ச்சியும், பளிச் நிறமும் கிடைக்கும்.  

* வறண்ட சருமம் இருப்பவர்கள் பால் ஆடையில் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிஷம் கழித்து வாஷ் பண்ணி விடுங்கள்.  

* உடம்பில் அங்கங்கே கருந்திட்டுகள் இருந்தால், ஓட்ஸை வேக வைத்து, பாலுடன் கலந்து, திக்கான பேஸ்ட்டாக ரெடி செய்துகொள்ளுங்கள். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். கருந்திட்டுகள் மங்கலாக ஆரம்பிக்கும். 

*  உடலில் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் அரிசி மாவு அல்லது கடலை மாவில் தயிர், கஸ்தூரி மஞ்சள் கலந்து அதை முகம் மற்றும் உடல் முழுக்கத் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு வட்ட வட்டமாகத் தேய்த்துக் கழுவுங்கள். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்தாலே சருமம் வழுவழுவென இருக்கும். இதற்குப் பதில் நலங்கு மாவைக்கூட டிரை பண்ணலாம். இது நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். 

பார்லரில் செய்ய வேண்டியவை...

* வெயிலில் செல்கிற பெண்களுக்கு இருக்கிற ஒரு பிரச்னை சீரற்ற சரும நிறம். கன்னம் பளிச்சென்று இருக்கும். ஆனால், நெற்றி, கழுத்து, மூக்கு நுனி ஆகியவை கறுப்பாக இருக்கும். இதுதான் சீரற்ற சரும நிறம். இதற்கு, டி டேன் சிகிச்சையை பார்லரில் செய்துகொண்டால், முகம், கழுத்து, முதுகு எல்லாம் ஒரே நிறத்தில் இருக்கும். 

* ஃப்ரூட் ஃபேஷியல், க்ளோ ஃபேஷியல் என விருப்பமான ஃபேஷியலைச் செய்துகொள்ளுங்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், வறண்ட சருமம் உள்ளவர்கள் கோல்டு ஃபேஷியலையும், எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்கள் டைமண்டு ஃபேஷியலையும் செய்துகொள்ளலாம். முத்து ஃபேஷியல் எல்லா வகை சருமத்துக்கும் பொருந்தும். 

* இப்போது டிரெண்ட் ஜூவல் ஃபேஷியல்தான். தங்கம், வைரம், பிளாட்டினம், பெரி டாட் ஸ்டோன் ஆகியவற்றின் சின்னச் சின்ன துகள்கள் சேர்க்கப்பட்ட க்ரீமால் ஃபேஷியல் செய்வோம். இரண்டு நாள் கழித்து முகம் ஜொலி ஜொலிக்கும். 

* மெனிக்யூர், பெடிக்யூர் இரண்டையும் பார்லரில் மட்டுமே செய்துகொள்ளுங்கள். கைக்கு டி டேன் தெரபி செய்துகொண்டால், மெஹந்தி வைத்தால் பளிச்சென்று தெரியும். உதட்டுக்கு மேலே இருக்கிற முடிகளைக் கல்யாணத்துக்கு முதல் நாள் வேக்ஸிங் மூலமாகவோ அல்லது த்ரெடிங் மூலமாகவோ ரிமூவ் செய்யாதீர்கள். கல்யாணம் நிச்சயிக்கப்பட்டவுடனே செய்து, அது உங்களுக்கு ஒத்துக்கொள்கிறதா என்று பார்த்து விடுங்கள்.  



Trending Articles

Sponsored