ஒரே இடத்தில் கொல்லப்பட்ட 90 யானைகள்... காரணம் என்ன?போட்ஸ்வானா, தெற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் நாடு. அங்கிருக்கும் வனவிலங்கு சரணாலயத்தில் யானைகளின் வாழ்விடம் அதிகமாக உள்ளது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 90 யானைகள் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் 87 யானைகளின் சடலங்களைக் கண்டுள்ளனர். அனைத்துமே தந்தங்கள் எடுக்கப்பட்டுக் கிடந்துள்ளன. இது முழுக்க தந்தக் கடத்தலுக்காக நடத்தப்பட்ட வேட்டை. அனைத்து சடலங்களுமே மிகச் சமீபத்தில் இறந்த யானைகளுடையது. இதேபோல் கடந்த மூன்று மாதத்தில் ஐந்து காண்டாமிருகங்களும் வேட்டையாடப்பட்டுள்ளன.

Sponsored


பக்கத்து நாடுகளில் அதிகமாக நடைபெற்ற கள்ளவேட்டை யானைகளை போட்ஸ்வானா நாட்டின் காட்டுப் பகுதிக்குள் பாதுகாப்பு தேடி வரவைத்தது. ஆனால், வேட்டைக்காரர்கள் அவற்றை இங்கும் விட்டுவைக்கவில்லை. அவற்றின் தந்தங்களுக்காகப் பின்தொடர்ந்து வந்துவிட்டனர். இது விரைவான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. 20-ம் நூற்றாண்டில் 415,000-ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை இதுபோன்ற வேட்டைகளால் வெறும் 43,000 ஆகக் குறைந்துவிட்டது. ஆப்பிரிக்காவில் யானைகளை வேட்டையாடுவது நடந்துகொண்டிருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியது. இதைத் தொடரவிட்டால் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களை இழந்ததுபோல் நாம் யானைகளையும் இழக்கநேரிடும் என்று எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored