`எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள்!'- அரப்பளீஸ்வரர் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வேதனை!



Sponsored



அரப்பளீஸ்வரர் அருவிக்கு வரும் பாதைகளில், பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துகிடப்பதாகவும், அதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர் கொல்லிமலை.1000 முதல் 1,300 மீட்டர் உயரம் உள்ள இந்த மலைத் தொடர், 280 சதுர கிலோ மீட்டர் கொண்டது. இதன் உயரம் 4,663 அடிகள் (1400 மீட்டர்) ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர். நாமக்கல் மாவட்டத்தின் ஐந்தாவது வட்டமாக கொல்லிமலை 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இங்கு எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள், சித்தர்கள் வாழ்ந்த குகை, நீர்வீழ்ச்சிகள், கோயில்கள் உள்ளன. 

Sponsored


Sponsored



இவற்றுள் மிகவும் புகழ்பெற்றது, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு அரப்பளீஸ்வரஸ் கோயில் அருகே செல்லும் படிக்கட்டு வழியாகச் செல்லலாம். பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறுவர்களுக்கு 5 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. இந்தக் கோயில் எதிரே அரப்பளீஸ்வரர் அருவி இருக்கிறது. இங்கு செல்ல 100-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளைக் கடந்துசெல்ல வேண்டும். இங்கு, தினந்தோறும் எண்ணற்ற பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் பிளாஸ்டிக் கவர், டீ கப் உள்ளிட்ட குப்பைகளை ஹோட்டல் உரிமையாளர்கள் கொட்டிவருகின்றனர்.

இதுகுறித்து பக்தர்களிடம் கேட்டப்போது, "கொல்லிமலை மிகவும் புனிதமானது. இந்த அருவியில் குளிக்க வேண்டும் என்பதற்காக சேலத்தில் இருந்து வருகிறோம். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இங்கு தூய்மை, சுகாதாரம் எதுவும் சரியில்லை. படிக்கட்டு அருகே உணவகம் உள்ளது. அங்குதான் சாப்பிட்டோம், டீ குடித்தோம். எங்களுக்கு பிளாஸ்டிக் பேப்பரில் உணவு கொடுக்கப்பட்டது. சாப்பிட்ட பின் அந்த பேப்பரையும் கப்புகளையும் ஹோட்டல் பின்புறம் வீசுகிறோம். கடைக்குப் பின்புறமிருந்து நாற்றமடிக்கிறது. அங்கு, குப்பைகள் மலைபோல குவிந்துகிடக்கின்றன. மூக்கைப் பிடித்துக்கொண்டு கீழே நடந்தோம். அங்கு மாமிசம், மது அருந்த வேண்டாம் என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. யாரும் மது குடிக்கவில்லை. ஆனால், சுத்தம்தான் அங்கு அறவே இல்லை. மொட்டை அடிக்கும் இடத்தில் முடியெல்லாம் அப்படியே கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பை. படிக்கட்டு அருகே குப்பை கொட்டுபவர்கள் மீது கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர்.



Trending Articles

Sponsored