ஐபோன் வாடிக்கையாளர்களே... iOS12 அப்டேட்டின் சிறப்பு அம்சங்கள் இதோ! #IOS12வருடம் தோறும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு உலகெங்கும் உள்ள தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும். அந்த வருடத்தின் தொழில்நுட்ப புரட்சி என்று கூறும்வகையில் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது ஆப்பிளின் வழக்கம், இந்த வருடம் செப்டம்பர் 12ம் தேதி நடக்கவுள்ள விழாவில் வெளியிடவுள்ள புதியவகை ஐபோன் மற்றும் கேட்ஜெட்டுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி புதிய 12.9 இன்ச், 11 இன்ச் ஐபேட் ப்ரோ டேப்லெட்  மற்றும் சீரிஸ் 4 இல் ஆப்பிள் வாட்ச் எனப் பலவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sponsored


வரவிற்கும் iOS 12 இல் உள்ள சிறப்பு அம்சங்கள் 

Sponsored


குரூப் நோட்டிபிகேஷன் - இதுவரை உள்ள செயலிகளில் வரும் நோட்டிபிகேஷன் தனி தனியே ஒன்றின் பின் ஒன்றாக ஐபோன் முகப்பு முழுவதை ஆக்கிரமித்து வந்தன. தற்போது கொடுக்கப்பட்டுள்ள இந்த அப்டேட்டின்படி ஒவ்வொரு செயலிகளின் நோட்டிபிகேஷனை குழுமமாக முகப்பில் இருக்கும். தேவையான செயலிகளை  தேர்ந்தெடுக்கும்போது மொத்த நோட்டிபிகேஷன் ஒன்றின் பின் ஒன்றாகத் தெரியும்,  முகப்பு தோற்றமும் பார்க்க இலகுவாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Sponsored


"ஸ்கிரீன் டைமிங்" நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைகள் எப்படி ஐபோன் பயன்படுத்துகிறீர்கள் என்றும், நீங்கள் எதற்கு அதிகம் உங்கள் போன்-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்று தெளிவான விளக்கப்படம் மூலம் உங்கள் பயன்பாட்டுக்கான சமநிலையை அறிந்து உங்கள் பயன்பாட்டை எளிதாகவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 'ப்ளஸ்'(iphone 'X' PLUS)  வகை மாடல்கள் இனி 'மேக்ஸ்' (iphone 'X' max) எனப் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதுTrending Articles

Sponsored