படுக்கையில் நாகப் பாம்பு... அதிர்ச்சியான தோழி! என்ன நடந்தது?



Sponsored



விடுதி அறையில் தூக்கத்தில் இருந்து விழித்த பெண்ணுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. 

ஒடிசாவில், மயுர்பஞ்ச் மாவட்டம் பரிபடா நகரில் செயல்பட்டுவரும் மகளிர் விடுதி ஒன்றில், 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. விடுதிக்குள் புகுந்த பாம்பு, பெண்கள் தங்கியுள்ள ஓர் அறைக்குள் சென்றுள்ளது. பாம்பு புகுந்த அறையில் பெண் ஒருவர் கட்டிலில் படுத்து உறங்கியிருக்கிறார். அறைக்குள் புகுந்த பாம்பு, அந்தப் பெண்ணின் பக்கத்தில் பதுங்கியது. தன் அருகே பாம்பு இருப்பதுகூட தெரியாமல் அந்தப் பெண், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறார். 

Sponsored


அப்போது, எதேச்சையாக அறைக்குள் வந்த அப்பெண்ணின் தோழி, படுக்கையில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். என்ன செய்வது என்று யோசித்த அந்தப் பெண், உடனடியாக அருகில் இருந்த துடைப்பத்தை எடுத்து, தூங்கிக்கொண்டிருந்த பெண்ணைத் தட்டி எழுப்பியுள்ளார். விழித்தெழுந்தவரிடம், அருகில் பாம்பு இருக்கிறது என்று சொல்ல, அப்பெண்ணும் பதற்றப்படாமல், சாமர்த்தியமாகப் படுக்கையிலிருந்து எழுந்துள்ளார். பாம்பிடம் இருந்து தப்பித்த பெண்கள், விடுதி நிர்வாகிகளிடம் விஷயத்தைக் கூறியுள்ளனர். 

Sponsored


இதையடுத்து, அப்பகுதியில் நன்கு அறியப்பட்ட பாம்பு பிடிப்பவரான கிருஷ்ணா சந்திராவை அழைத்துள்ளனர். விடுதிக்கு விரைந்த அவர், மீன் வலையின் உதவியுடன் 5 அடி நீளம் கொண்ட பெரிய நாகப்பாம்பைப் பிடித்துச்சென்றார். பின்னர், சிம்லிபாலில் உள்ள வனப்பகுதியில் அந்தப் பாம்பை விட்டுச்சென்றார்.
 



Trending Articles

Sponsored