நிஸான் கிக்ஸ் காரின் டிசைன் ஸ்கெட்ச்! #DesignSketch



Sponsored



க்ரெட்டா, S-க்ராஸ், BR-V, XUV 5OO, காம்பஸ், ஹெக்ஸா ஆகிய கார்களுக்குப் போட்டியாக அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் களமிறங்கப்போகும் நிஸான் கிக்ஸின் டிசைன் ஸ்கெட்ச்சை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். நிஸான் கிக்ஸ் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் V பிளாட்ஃபார்மில் இல்லாமல் டஸ்ட்டர்/டெரானோ, லாஜி, கேப்ச்சர் தயாரிக்கப்படும் பட்ஜெட் BO ப்ளாட் ஃபார்மில் தயாரிக்கப்பட உள்ளது. ஆனால், டஸ்ட்டரிலிருந்து டெரானோ உருவானதைப் (Badge Engineering) போல இல்லாமல், தனக்கெனப் பிரத்தியேக பாடி ஷெல்லுடன் கிக்ஸ் களமிறங்குவதாகக் கூறியிருந்தார்கள். இந்தியாவில் நிஸானின் விலையுயர்ந்த காராக பொசிஷன் செய்யப்படப்போகிறது கிக்ஸ்.  

டிசைன் ஸ்கெட்சை வைத்துப் பார்க்கும்போது நீளமான பானெட் - தடிமனான வீல் ஆர்ச் - க்ராஸ்ஓவர் கூபே டிசைன் - ரூஃப் ரெயில் - டயமண்ட் கட் அலாய் வீல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. டஸ்டர், டெரானோ கார்களை விட அதிக நீளத்தைக் கொண்டிருக்கும் என்றும் தோன்றுகிறது. உலகளவில் டிசைனுக்குப் பெயர்பெற்ற கிக்ஸின் கேபினும் சர்வதேச மாடலைப் போலவே வடிவமைக்கப்படும் என்பதுடன், ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி மற்றும் 360 டிகிரி கேமரா உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் - அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் - க்ளைமேட் கன்ட்ரோல்களுடன் ஏசி - பலவித கன்ட்ரோல்களுடன், கூடிய ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் - டூயல் டோன் ஃப்னிஷ் - புஷ் பட்டன் ஸ்டார்ட் - டிராக்‌ஷன் கன்ட்ரோல்களுடன் - 4 காற்றுப்பைகள் ஆகிய மாடர்ன் வசதிகளும் கட்டாயம் இருக்கும்.

Sponsored


Sponsored


டஸ்ட்டர்/டெரானோ மற்றும் கேப்ச்சர் ஆகிய கார்களில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் ஆப்ஷன்களே இடம்பெறுகின்றன. 106bhp பவரை H4K பெட்ரோல் இன்ஜின் வெளிப்படுத்தினால், 110bhp பவரை K9K டீசல் இன்ஜின் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல்/CVT மற்றும் டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கும் முயற்சியாகவே, எஸ்யூவி சந்தையில் இந்த காரை களமிறக்குகிறது நிஸான்.

முதல் வருடத்தில் 30 ஆயிரம் கிக்ஸ் கார்களை இந்தியாவில் விற்பனை செய்யவும், இங்கிருந்து சர்வதேச சந்தைகளுக்கு 20 ஆயிரம் கிக்ஸ் கார்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்திலும் இந்நிறுவனம் உள்ளது. எனவே, போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, விலை விஷயத்தில் நிஸான் உஷாராகவே இருக்கும். இப்படிப் பெரிய இலக்கோடு இறங்கும் கிக்ஸ் விலை குறைவாகவே மற்ற கார்களுடன் போட்டிபோடும் விதமாகவே இருக்கும் என்று தெரிகிறது.



Trending Articles

Sponsored