64 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்கும் ஃபேஸ்புக்! ஆச்சர்யமளிக்கும் கட்டடம்Sponsoredஉலகில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் மனித இனம் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அண்மைக் காலமாகத் தீவிரமாக எச்சரித்து வருகின்றனர். ஐ.நா-வும் புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில், சமூக வலைதளமான ஃபேஸ்புக், கலிபோர்னியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதிய கட்டடம் ஒன்றைக் கட்டியுள்ளது. இதில் என்ன ஆச்சர்யம் என்ற கேள்வியா...? 5,23,000 சதுர அடி ( 22.7 ஏக்கர்) பரப்பளவில், திறக்கப்படவுள்ள புதிய கட்டடம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனுடன், மறுசுழற்சி நீர் அமைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை பிரபல கட்டட வடிவமைப்பாளர் பிராங்க் கெரி வடிவமைத்துள்ளார். 

Sponsored


Sponsored


ஃபேஸ்புக் தலைமை அதிகாரி ஷெரில் சாந்பெர்க் கூறுகையில், `புதிதாகத் திறக்கவுள்ள கட்டடம் மிகவும் நிலையானதாகவும் உறுதியாகவும் உள்ளது. ஆற்றல் மற்றும் கழிவுகளைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அதாவது, மறுசுழற்சி செய்யப்படும் நீரால் ஆண்டுக்கு 17 மில்லியன் கேலன்கள் தண்ணீர் சேமிக்க முடியும்' என்றார். 

ஃபேஸ்புக் நிறுவன அலுவலக கட்டடத்தால் மட்டும் கலிபோர்னியாவில் ஆண்டுக்கு, 64 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. Trending Articles

Sponsored