``நான் மீண்டு வந்திருக்கிறேன்''- எழுத்தாளர் சிவசங்கரிSponsoredஎழுத்தாளர் சிவசங்கரியை அறியாத வாசிப்பாளர்கள் இருக்கமுடியாது. நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, சினிமா என எழுத்தின் பல்வேறு தளங்களில் இயங்கியவர். `இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' செயல்திட்டத்துக்காக இந்தியாவையும், பயணக் கட்டுரைகளுக்காக உலகம் முழுவதும் வலம்வந்தவர். இந்த வருடம் பிப்ரவரி மாதம், சிவசங்கரியின் வளர்ப்பு மகள் லலிதா இரைப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோயால் இயற்கை எய்தினார். அந்தத் துயரத்தைத் தொடர்ந்து, சிவசங்கரிக்கு ஜூன் மாத இறுதியில் ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. அதிலிருந்து மீண்டுவந்தவரிடம் பேசினோம்.

``எனக்கு நீரிழிவு, கொலஸ்ட்ரால் என்று எந்தப் பிரச்னையும் இதுவரை வந்ததில்லை. ஹார்ட் அட்டாக் வருவதற்கு 3 மாதங்களுக்கு முன்பும், மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்துகொண்டேன். ரிசல்ட் நார்மல் என்றே சொன்னது. அட்டாக் வந்த அன்றும்கூட காலை 9 மணிக்கு இதயத்துக்கான ஈ.சி.ஜி. பரிசோதனை செய்திருந்தேன். அதிலும், அட்டாக் வரப்போவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பிறகு, காலை 11 மணிக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. உடனே மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றிவிட்டார்கள். இதயத்தின் முக்கியமான ஒரு ரத்தக்குழாயில் 99 சதவிகிதம் அடைப்பு இருந்திருக்கிறது. அதுதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம். பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய்க்குள் ஸ்டென்ட் (Stent) வைத்திருக்கிறார்கள். `நிறைய பேசக் கூடாது; அதிகமான வேலைகள் செய்யக் கூடாது; மகள் லலிதாவைப் பற்றி நினைத்து நினைத்து மன அமைதியை இழக்கக் கூடாது' என மருத்துவர்கள் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னதைப் பின்பற்றி நலமாகி வருகிறேன். ஹார்ட் அட்டாக் மாதிரியான சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?'' என மென்மையாகச் சிரிக்கிறார் சிவசங்கரி.  

Sponsored


ஆரோக்கியத்துடன் எழுந்து வாருங்கள் எழுத்து ஆளுமையே!

Sponsored
Trending Articles

Sponsored