விற்பனைக்கு வந்தது டாடாவின் முதல் கிராஸ்ஓவர் #NRGToDoMore



Sponsored



டாடாவின் முதல் கிராஸ் ஓவர் ஹேட்ச்பேக் டியாகோ NRG விற்பனைக்கு வந்துவிட்டது. பாடி கிட் மூலம் டியாகோவின் டிசைனை எஸ்யூவி போல வலிமையானதாக மாற்றி NRG மாடலாகக் கொடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ். சாதாரண டியாகோ காரைவிட நீளம், அகலம், உயரம் என எல்லாவற்றிலும் கொஞ்சம் பெரியது இந்த NRG.

முன்-பின் பக்க பம்பரில் டிசைனுக்காக சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன் மற்றும் பின்பக்கம் அலுமினியம்போல இருக்கும் scuff plate, காரின் பக்கவாட்டுப்பகுதியிலும் வீல் ஆர்ச் பகுதியிலும் கறுப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சாதாரண டியாகோவை ஒப்பிடும்போது இந்த காரின் உயரத்தை 10 மி.மீ அளவு அதிகரித்துள்ளார்கள்.

Sponsored


பாடி கிளாடிங்கின் நிறத்துக்குப் பொருத்தமாக காரின் roof, roof-rails, மிரர், டோல் ஹேண்டில் போன்ற பகுதிகளுக்குக் கறுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இந்த காரில் சாதாரண ஹாலோஜன் லைட்டுக்கு பதிலாக பிரொஜக்டர் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. டிகாரின் விலை உயர்ந்த வேரியன்டில் இருப்பதுபோல ஹெட்லைட் கறுப்பு நிற டிசைன் செய்யப்பட்டுள்ளது. 14 இன்ச் அலாய் வீலின் டிசைனும் புதிது. 

Sponsored


காரின் டேஷ் போர்டில் ஏசியைச் சுற்றி ஆரஞ்சு நிறம் வருகிறது. electric adjustable mirror மற்றும் cooled glove box புதிய வசதிகள். 5.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் கேமரா இந்த டியாகோ NRG-யில் மட்டுமே கிடைக்கும். மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. 85 bhp உருவாக்கக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 70 bhp பவர் தரக்கூடிய 1.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கும். 

ரூ.5.50 லட்சம் (பெட்ரோல்) மற்றும் ரூ.6.32 லட்சம் (டீசல்) எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் ஒரே வேரியன்டாக வரும் டியாகோ NRG சாதா டியாகோவின் டாப் வேரியன்ட்டைவிட ரூ.30,000 விலை அதிகம். மாருதி சுஸூகி செலிரியோ எக்ஸ் மற்றும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்குப் போட்டியாகக் களமிறங்கியிருக்கும் டியாகோ NRG மாடல் ஃப்ரீஸ்டைலைவிட விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 



Trending Articles

Sponsored