விற்பனைக்கு வரும் ஃபார்முலா ஒன் சாம்பியன் ஜென்சன் பட்டனின் மெக்லரின் கார்!2009-ம் ஆண்டின் ஃபார்முலா ஒன் சாம்பியன் ஜென்சன் பட்டன் தனது விலை உயர்ந்த மெக்லரின்  P1 காரை விற்பனை செய்வதாக அறிவித்திருக்கிறார். மெக்லரின் P1, மணிக்கு 350 கி.மீ வேகம் போகக்கூடிய லிமிடட் மாடல் ஹைப்ரிட் சூப்பர்கார். உலகில் மொத்தம் 375 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. ஃபார்முலா ஒன் காரில் இருக்கும் தொழில்நுட்பத்தையும், ஹைப்ரிட் எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த காரை ஜென்சன் பட்டன் தற்போது விற்பனை செய்யவிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

Sponsored


அமெரிக்காவில் இருப்பதால் காரை ஓட்டுவதற்கு நேரமில்லை, வேறு யாராவது இந்த காரை அனுபவிக்கட்டும் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 887 கி.மீ மட்டுமே பயணித்திருக்கும் இந்த கார் ஜென்சன் பட்டனுக்காக மெக்லரின் ஸ்பெஷல் ஆபரேஷன் டீமால் தயாரிக்கப்பட்ட one-off மாடல். Grauschwartz Grey நிறத்தில், ரைடு ஹைட்டை குறைக்காமல் டிராக்கில் ஓட்டிச்செல்லக்கூடிய ' Track mode 2' ஆப்ஷனோடு தயாரிக்கப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored


எடை குறைவான ஃபோர்ஜ்டு வீல்ஸ், மஞ்சள் நிறத்தில் பிரேக் கேளிப்பர்கள், மஞ்சள் நிற சீட் வேலைப்பாடுகள் மற்றும் மெரிடியன் சவுண்டு சிஸ்டம் போன்றவை உள்ளன. மெக்லரின் காரின் விலை 8 கோடி ரூபாய். ஃபார்முலா 1 சாம்பியனின் கார் என்பதால் தற்போது இதன் விலை 15 கோடி.Trending Articles

Sponsored