முதல்வர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்வார்- டி.டி.வி.தினகரன் திடுக் தகவல்Sponsoredதமிழகத்தில் அ.தி.மு.க அணிகள் இணைந்த பிறகு, தினகரன் அணி தனியாகச் செயல்பட்டுவருகிறது. தினகரன் பக்கம் 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். 


சென்னை அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார். அப்போது அவர், "அணிகள் இணைந்துவிட்டாலும் சசிகலாதான் பொதுச் செயலாளர். பொதுக்குழு கூட்டும் உரிமை பொதுச் செயலாளருக்குத்தான் உண்டு. இவர்கள் பொதுக்குழுவைக் கூட்டி எதுவும் செய்துவிட முடியாது. 

Sponsored


எடப்பாடி பழனிசாமி, தனது பதவியைக் காப்பாற்றிகொள்ள வேண்டும் என்ற நோக்கில், துரோகச் சிந்தனையுடன் செயல்படுகிறார். அதனால்தான் அவர்களுடன் சேர்ந்துள்ளார். எங்களுக்கு ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எங்கள் பக்கம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் துரோக சிந்தனை இல்லாத முதல்வர் வேண்டும் என்ற கோரிக்கைதான் உள்ளது. அதற்கு, அவராகவே தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று பார்க்கிறோம். பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர் பதவி விலகினால்தான் பிரச்னை தீரும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், கட்சியை வழிநடத்தியது சசிகலாதான். அங்கு இருக்கும் ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ-க்கள் எல்லோரும் இங்கு வருவார்கள். விரைவில் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை 40 ஆகும்" என்றார். 

Sponsored


பா.ஜ.க சொல்படிதான் முதல்வர் செயல்படுகிறாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எங்கள்  கட்சியினர் சரி இல்லாததற்கு மற்றவர்களை நாங்கள் குறை சொல்ல முடியாது" என்றார். Trending Articles

Sponsored