நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து: டி.டி.வி.தினகரன்Sponsoredதமிழகத்தில் அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு பிறகு நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தினம் தினம் போராடி வருகின்றனர். 


இந்த நிலையில் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று, தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம், கடையடைப்பு போன்ற எந்தச் செயலும் நடத்தக் கூடாது என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

Sponsored


நாளை அ.தி.மு.க தினகரன் அணி சார்பில் நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நாளை நடைபெறுவதாக அறிவித்திருந்த ஆர்பாட்டத்தை ரத்து செய்யப்படுவதாக தினகரன் அறிவித்துள்ளார். 

Sponsored


இது குறித்து அவர் தனது ட்விட்டர் கணக்கில், “நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு  அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இருப்பினும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து கழகத்தின் சார்பில் நாளை நடைபெறவிருந்த நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது” என்று கூறினார். 
 Trending Articles

Sponsored