ஆளுநருக்கு மு.க ஸ்டாலின் ஒரு வாரம் கெடு!Sponsoredதமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்து பேசினார்.  


அ.தி.மு.க வில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த பிறகும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லை என தினகரன் அணியும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தனர். தினகரன் அணியினர் சில நாள்களுக்கு முன்னர் தமிழக ஆளுநரை சந்தித்து, தற்போது முதல்வராக உள்ள பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தனர். 

Sponsored


இந்நிலையில், இன்று தி.மு.க செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் ஆளுநரை தனது கூட்டணி கட்சி எம்.எல்.ஏ க்களுடன் சென்று சந்தித்தார். ஆளுநரை சந்திட்டு விட்டு வெளியே வந்த அவர் “ஆளும் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். முதலமைச்சர் மீதான நம்பிக்கையை 119 சட்டமன்ற உறுப்பினர்கள் இழந்து விட்டனர். மீதம் உள்ள 114 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். ஆளுநர் இன்னும் ஒரு வாரத்தில்  சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு பிறபிக்கவில்லை என்றால், அதன் பின்னர் நீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் நாடி செல்வோம்” என்று கூறினார்.

Sponsored


ஆளுநரை சந்திக்க எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், துணை எதிர்கட்சி தலைவர் துரைமுருகன், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஐ.யு.மு.எல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றனர்.  Trending Articles

Sponsored