’நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது’ -ஜெயக்குமார் பேட்டிSponsoredதமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால் சட்டமன்றத்தைக் கூட்டி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு இட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்று தமிழக ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இன்னும் ஒரு வாரத்தில் சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Sponsored


இந்நிலையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் இருப்பது ஜெயலலிதா ஆட்சி. ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்பட முடியும். எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக தான் உள்ளது. எங்களுக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது” என்றார்.  
 

Sponsored
Trending Articles

Sponsored