’சாப்பிட்டுவிட்டு வீட்டில் ரெஸ்ட் எடுங்க’ - ஒரு லட்சம் அபராதம் விதித்து வெற்றிவேலுக்கு நீதிமன்றம் குட்டு!Sponsoredஅ.தி.முக பொதுக்குழு நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்குழுக்கு தடைகோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ  வெற்றிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

வெற்றிவேல் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், “பொதுக்குழுவைத் தடை செய்யக் கோரி வெற்றிவேல் தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பொதுக்குழுவில் கலந்துகொள்ள விரும்பாவிட்டால் வீட்டிலே இருந்துகொள்ளலாம் அல்லது பொதுக்குழுவில் கலந்துகொள்ளலாம் அல்லது சாப்பிட்டு மட்டும் வரலாம். இந்த மனு தள்ளுபடி செய்யபடுகிறது. தடை வேண்டும் என்றால் தேர்தல் ஆணயத்தை நாடுங்கள்” என்றது. நீதிமன்ற நேரத்தை வீணடித்ததுக்காக வெற்றிவேலுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை திட்டமிட்டபடி அ.தி.மு.க பொதுக்குழு நடக்கும். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored