'கைதாவோம் என பயந்தார் எடப்பாடி பழனிசாமி'! - தினகரன் அதிரடிSponsoredசென்னை அடையாறு வீட்டில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார் டி.டி.வி.தினகரன். இந்தச் சந்திப்பில் முதல்வர் பழனிசாமியையும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.  

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க-வில் தினகரன் அணிக்கும் ஆளும் பழனிசாமி அணிக்கும் மோதல் வலுத்துவருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “ ஜெயலலிதா ஆசியுடன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானவன் நான். சிறிய விதிமீறல் குற்றச்சாட்டில்தான் நான் சிறைக்குச் சென்றேன். அவர்களைப் போன்று வசூல் செய்து அல்ல. சேகர் ரெட்டி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி சிக்கியது அனைவரும் அறிந்ததுதான். 

Sponsored


இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களும் கைதானார்கள். அவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, என்னிடம் பேசும்போதுகூட, 'சேகர் ரெட்டி விவகாரத்தில் நானும் என் மகனும் கைதாகிவிடுவோம் என எனக்கு பயமாக இருக்கிறது' என்று என்னிடமே தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் தண்டனை பெற்றுத்தான் ஆக வேண்டும். பெரும் தலைவர்கள் அமர்ந்த இருக்கையில் விதிவசத்தால் இன்று பழனிசாமி அமர்ந்திருக்கிறார். அவரை வீட்டுக்கு அனுப்பி வைப்பதென்றால் ‘மாமியார் வீட்டுக்குத்தான்’ போவார். சேகர் ரெட்டி, அன்புநாதன் விவகாரங்களில் அவர்கள் வசமாகச் சிக்கியுள்ளனர். என்னை ‘மாமியார் வீட்டுக்கு’ அனுப்பிவிட்டால் அவர்கள் தப்பிவிடலாம் என எண்ணுகிறார்கள்.

Sponsored


அவர்கள்தான் ‘மாமியார் வீட்டுக்கு’ப் போக இருக்கிறார்கள். நான் பலமுறை ‘மாமியார் வீட்டுக்கு’ச் சென்று வந்தவன். அதனால்தான் அரசியலில் இருக்கிறேன். இன்று அதையெல்லாம் கடந்து வந்துவிட்டேன்” என்றார்.  Trending Articles

Sponsored