”புதுச்சேரியில் டெங்கு பரவ அரசே காரணம்”- கிரண்பேடி குற்றச்சாட்டுSponsoredநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் செயல்பாட்டுக் குறைவே, புதுச்சேரியில் அதிகமாக டெங்கு காய்ச்சல் பாதிக்கக் காரணம் எனத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. அதுகுறித்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில், “பொது கவனிப்பு மற்றும் பாதுகாப்புப் பற்றிய விவகாரங்களை ஒழுங்காக மீளாய்வுசெய்வது மூத்த மேற்பார்வை அலுவலர்களின் முதன்மைக் கடமை. அனைத்துத் துறைச் செயலாளர்களும் துறைத்தலைவர்களும் தங்கள் பொறுப்புகளை வழக்கமான ஆய்வுக்கு உட்படுத்தி, உறுதிசெய்ய வேண்டும். அவர்கள், முந்தைய வழிமுறைகளைச் சரியாக ஆய்வுசெய்து பின்பற்ற வேண்டும். தங்களுக்குக் கீழுள்ள அதிகாரிகள் முறையாகச் செயல்படுகிறார்களா என்பதை அவர்கள் உறுதிசெய்யவும், தேவைப்படும் விசயங்களில் ஒருங்கிணைந்து செயல்படவும் வேண்டும்.

Sponsored


 சமீபத்தில், எந்தவித பாதுகாப்பு அனுமதியுமின்றி கடலில் பயணித்த பலர் மீட்கப்பட்டுள்ளனர். இது, உள்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. இதுகுறித்து, கடலோரக் காவல்படை, மீன் வளத்துறை மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் யாரும் உண்மையில் கவலைப்படவில்லை. உங்கள் தோல்விக்கு நீங்களேதான் பொறுப்பாவீர்கள். அதை, உங்கள் கீழுள்ள அதிகாரிகள்மீது ஒருபோதும் திணிக்க முடியாது. எல்லோருடைய செயல்பாடுகளும் இறுதியில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மும்பையைப் போன்று புதுச்சேரியில் நடக்கப்போவதில்லை. புதுச்சேரியில் டெங்கு நோயால் பல குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. முறையாகத் தூய்மைப் பணிகளைச் செய்திருந்தால், பலர் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். இது மிகவும் வேதனையளிக்கிறது. ஆளுநரின் தனிச்செயலர் தேவநீதிதாஸின் இரண்டு மகன்கள்கூட டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவை எல்லாவற்றிற்கும் காரணம், சுகாதாரத்துறையும் நகராட்சியும் முறையாகச் செயல்படாததே. அதனால் எத்தனை பேர் துன்பப்படுகிறார்கள் என்பதைக் கடவுள் அறிந்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored