'ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மோடிக்கு நன்றாகவே தெரியும்’ - நீலகிரியில் ஸ்டாலின் விளாசல்Sponsored’ஜெயலலிதா உடல்நிலை குறித்து மத்திய அரசுக்கு தெரியும். அதனால் தான் பிரதமர் மோடி மருத்துவமனையில் வந்து ஜெயலலிதாவை பார்க்கவில்லை’ என நீலகிரி தி.மு.க பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். 

நீலகிரி மாவட்டதில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ தமிழகத்தில் நடக்கும் எடப்பாடி ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை விட திமுக மீது தான் அதிக கோபம் இருக்கும். ஆட்சியை திமுக -வால் கலைக்க முடியவில்லையே என்ற கோபத்துடன் மக்கள் உள்ளனர்.

Sponsored


ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு நன்கு தெரியும். அதனால் தான் அவர் மருத்துவமனையில் வந்து பார்க்கவில்லை. அந்த உண்மைகளை மறைக்கவே இந்த புதிய ஆளுநர் நியமனம் நடந்துள்ளது. இடைதேர்தல்களில் பயன்படுத்தியதாக சொல்லபட்ட ஜெயலலிதா கைரேகைகளும் பொய் தான்.  

Sponsored


அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த போது தமிழக அரசு சார்பில் மருத்துவ குறிப்புகள் வெளியாயின. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மருத்துவ குறிப்புகள் ஏன் வெளியிடவில்லை? முதல்வராக இருந்தவரை ஜெயலலிதாவின் மரணம் குறித்து பன்னீர் செல்வம் கவலைபடவில்லை. நெடுவாசல் உள்ளிட்ட போராட்டங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. திமுக தான் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு பாதுகாப்பாக உள்ளது ” என்றார்.Trending Articles

Sponsored