’ராகுல் காந்தி கட்சியின் தலைவராக வேண்டும்’ - இரண்டு மாநிலக் கமிட்டிகள் தீர்மானம்!



Sponsored



அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகிப்பவர் சோனியா காந்தி. சமீபகாலமாக, அவர் உடல்நிலை சரியில்லாமல் ஓய்வு எடுத்துவருகிறார். எனவே, கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்திதான் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று கட்சிப் பணிகளைச் செய்துவருகிறார். குறிப்பாக இளைஞர்களை கட்சிக்குள் இணைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார்.  காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் எனும் குரல்கள் எழுந்துவருகின்றன. 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டிகள், ராகுல் காந்தி கட்சியின் தலைவராக வேண்டும் எனக் கோரும் தீர்மானத்தை இயற்றியுள்ளன. இதுகுறித்து, சச்சின் பைலட் (ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்), ' ராகுல் காந்தி, மக்களின் குரலை வலிமையாக எடுத்துச்சென்று பா.ஜ.க-வுக்கு எதிரான நிலையை வலுவாக்கியுள்ளார்' என்கிறார். மேலும் , 'கட்சியின் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என தொண்டர்களும் விரும்புவதாகக் கூறுகிறார். 

Sponsored


விரைவில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொள்ளக்கூடும் எனத் தெரிகிறது.  

Sponsored




Trending Articles

Sponsored